முஸ்லீம்கள், கிறிஸ்தவர்கள் நடத்தும் அம்மன் திருவிழா

Subscribe to Oneindia Tamil

சேலம்:

சேலத்தில் காளியம்மன் கோயில் பண்டிகையை முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் சேர்ந்து நடத்தி வருகின்றனர்.

சேலத்தில் உள்ள பொன்னம்மாப்பேட்டை என்ற இடத்திற்கு அருகில் உள்ளது தம்பி காளியம்மன் கோவில். சுமார் 25 ஆண்டுகளாக இந்தகோயிலில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.

இந்த பகுதியில் அதிக அளவு முஸ்லீம்கள் வசிக்கின்றனர். ஆண்டுதோறும் இந்த திருவிழாவில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உட்படஅனைவரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழா மொத்தம் ஏழு நாட்கள் நடைபெறும். விழா தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே முகூர்த்தகால் நடப்படும். கடந்ததிங்கள்கிழமை முகூர்த்த கால் நடப்பட்டது. அப்பகுதி கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லீம்கள் ஆடு மற்றும் கோயில் கட்டளை பணத்தினைசெலுத்தி விழாவினை தொடங்கி வைத்தனர்.

நேற்றைய விழாவில் காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து ஆட்டுக் கிடா வெட்டினர். இரவு முஸ்லீம் குடும்பங்கள் இணைந்து கும்பபூஜையும் நடத்தினர்.

இது குறித்து கட்டளையை ஏற்று நடத்திய முஸ்லீம் குடும்பத்தினர் கூறுகையில், கடவுளில் எங்களுக்கு எந்த வேறுபாடும் இல்லை, அதேபோல் மதங்களிலும் இல்லை. இந்துங்கள் தங்கள் விழாவில் எங்களை பங்கேற்கச் செய்து பெருமைபடுத்துகின்றனர். அதற்கு கைமாறாகவிழாவின் சில நிகழ்ச்சிகளை நாங்கள் நடத்துகிறோம். இந்துக்களின் மிகப் பெரிய மனதும், அவர்களின் பெருந்தன்மையும் தான் இந்தஒற்றுமைக்குக் காரணம் என்றனர்.

இந்த விழாவை நடத்தி வரும் விழா கமிட்டி செயலாளர் கூறுகையில், எங்கள் திருவிழாவில் கலந்து கொள்வதோடு மட்டுமல்லாமல்விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளையும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்களே நடத்தி வைக்கின்றனர். இது எங்களுக்கு மிகப் பெருமையாகஇருக்கிறது. மத வேறுபாடு பாராமல் எங்கள் மத நிகழ்ச்சியில் பங்கேற்கும் முஸ்லீம்கள் மற்றும் கிருஸ்தவர்களின் பெருந்தன்மை தான்பெரியது என்றார்.

இங்கே பல்வேறு மதத்தினர் சேர்ந்து மதங்களை வென்று காட்டி வருகின்றனர்.

நம் நாட்டுக்கு குஜராத் கலவரங்கள் ஏற்படுத்தி வரும் காயங்களுக்கு இந்த அம்மன் கோவில் விழா ஒரு ஆறுதல்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+