பிரபாகரனை பிடிக்க கோரி வாழப்பாடி உண்ணாவிரதம்
சென்னை:
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவரவேண்டும் என்று கோரி காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமமூர்த்தி இன்று (திங்கள்கிழமை)சென்னையில் உண்ணாவிரதம் இருக்கிறார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு மேலாகியும் கடந்த சிலஆண்டுகளா அமைதியாக இருந்த சில தமிழக அரசியல் கட்சிகள், மீண்டும் இதுகுறித்து குரல் கொடுக்கஆரம்பித்துள்ளன.
அதிலும் கடந்த 10ம் தேதி சர்வதேசப் பத்திரிக்கையாளர்களை பிரபாகரன் சந்தித்த பிறகு, ராஜிவ் கொலையில்முக்கியக் குற்றவாளியான அவரைக் கைது செய்து கொண்டு இந்தியாவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றுஅக்கட்சிகள் மத்திய அரசை நெருக்க ஆரம்பித்துள்ளன.
முதற்கட்டமாக பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர் இது தொடர்பாகக் கடிதம் எழுதினார். அதன் பிறகு கடந்த16ம் தேதி புலிகளுக்கு எதிரான இதுகுறித்த தீர்மானம் ஒன்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் தமிழக ராஜிவ் காங்கிரசின் தலைவரானவாழப்பாடி ராமமூர்த்தி, பிரபாகரனை உடனடியாக இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று கோரிஇன்று காலை உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
சென்னை-வள்ளுவர் கோட்டம் முன்பாகத் தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தமிழக காங்கிரஸ்தலைவரான இளங்கோவன் தொடங்கி வைத்தார்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேலும் பல முக்கியத் தலைவர்களும் கலந்துகொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications