கொழும்பு to
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இலங்கையின் தலைநகர் கொழும்புவிற்கும் தூத்துக்குடிக்கும் இடையே படகுப் போக்குவரத்து தொடங்குவதுகுறித்து பரிசீலிக்கப்படும் என்று இலங்கை கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சரான ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இத்தகவலை சென்னையில் இன்று வெளியிட்டு இலங்கை முதலீட்டாளர் மன்றத் தலைவர் அர்ஜூன மகேந்திராபேசுகையில்,
கொழும்புக்கும் தூத்துக்குடிக்கும் இடையே படகுப் போக்குவரத்தைத் துவக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்துஆராயப்படும் என்று ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகாரிகளுடன் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதேபோல, தலைமன்னாருக்கும் தமிழகத்தின் ராமேஸ்வரம் அல்லது தூத்துக்குடிக்கும் இடையே தரை வழிப்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தரை வழிப் பாலம் அமைக்கும் பணி அடுத்து இரண்டு ஆண்டுகளில் தொடங்கும் என்றார் மகேந்திரா.












Click it and Unblock the Notifications