சென்னையில் ஒரே நாளில் 5 வெடிகுண்டு புரளிகள்: போலீசார் திணறல்
சென்னை:
சென்னையில் உள்ள ஐந்து வணிக வரி அலுவலகங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மர்ம போன்மிரட்டல் வந்ததையடுத்து சென்னை போலீசார் பெரிதும் திண்டாடிவிட்டனர்.
சென்னை-பாரிமுனையில் உள்ள வணிக வரி அலுவலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அங்கு ஒரு மர்மபோன் வந்தது. தகவலறிந்து போலீசார் உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுடன் அங்கு விரைந்து சென்றுசோதனையிட்டனர்.
அங்கு சோதனை நடந்து கொண்டிருந்தபோதே, கடற்கரை, கிரீன்வேஸ், கிரீம்ஸ் சாலை, எழிலகம் ஆகிய பகுதிகளில்உள்ள வணிக வரி அலுவலகங்களுக்கும் இதே போன்று வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம போன் வந்தது.
இதையடுத்து அனைத்து வணிக வரி அலுவலகங்களுக்கும் வெடிகுண்டு நிபுணர்கள் பிரித்து அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனால் வெகுநேர சோதனைக்குப் பிறகும் எந்த வெடிகுண்டும் எந்த அலுவலகத்திலும்சிக்கவில்லை.
வணிக வரி அதிகாரிகளால் பாதிக்கப்பட்ட யாரோதான் இந்தப் புரளியைக் கிளப்பி விட்டிருக்கக் கூடும் என்றுதெரிகிறது.
இந்த வெடிகுண்டுப் புரளியால் நேற்று சென்னை போலீசார் மிகவும் திண்டாடிப் போய்விட்டனர்.












Click it and Unblock the Notifications