சபாநாயகர் மீது துரைமுருகன் பாய்ச்சல்
சென்னை:
பரிதியையும் பொன்முடியையும் சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முன்பேசபாநாயகரும் ஆளும் கட்சியினரும் திட்டமிட்டு இருந்ததாக திமுக குற்றம் சாட்டியுள்ளது.
அவையில் இருந்து பரிதியும், பொன்முடியும் வெளியேற்றப்பட்டவுடன் திமுக உறுப்பினர்கள் அனைவரும்வெளியேறினர். வெளியே வந்த திமுக சட்டசபைத் துணைத் தலைவர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறுகையில்,
இது முன்பே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ள நாடகமாகும். நாங்கள் ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானத்தைத் தந்துஅது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று கோரினோம். அதை ஏற்க மறுப்பது சபாநாயகரின் உரிமை.
அதே போல அதை வலியுறுத்துவது எங்களின் உரிமை.
இந்த விவாதம் நடந்து கொண்டிருந்தபோது தேவையில்லாமல் நேற்று நடந்த சம்பவங்களைச் சுட்டிக் காட்டிசபாநாயகர் பேசினார்.
நேற்று பரிதியும், பொன்முடியும் ஆபாசமாகப் பேசியதாகக் கூறி அவர்களை சஸ்பெண்ட் செய்துள்ளார்.
இது ஒத்தி வைப்புத் தீர்மானம் குறித்து விவாதிக்க வலியுறுத்தியதால் எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. ஏற்கனவேஇவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுத் தான் அவைக்கே வந்தார்கள்.
முடிவு செய்தது மாதிரியே நேற்று நடந்த பிரச்சனையைக் காரணம் காட்டி இன்று சஸ்பெண்ட் செய்துள்ளனர். இதுதிட்டமிட்டு நடத்தப்பட்ட செயல் என்றார்.












Click it and Unblock the Notifications