அமைதிப் பேச்சுக்கு எதிராக இலங்கையில் போராட்டம்
கொழும்பு:
விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை முயற்சிகளை உலகமேபாராட்டி வரவேற்றுக் கொண்டிருக்கும் நிலையில், அந்நாட்டிலேயே இம்முயற்சிகளுக்கு எதிராகப் போராட்டங்கள்ஆரம்பித்துள்ளன.
வடக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள கட்டரகாமா என்ற நகரில் நடந்த அமைதிப் பேரணியில் கலந்து கொண்டுபேசும்போது ரணில் இவ்வாறு தெரிவித்தார். முக்கியமாக பெரும்பான்மையான சிங்களர்கள் இந்தப்பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்புக் கொடுத்தால் அது நிச்சயம் வெற்றி பெறும் என்று ரணில் கூறினார்.
ஆனால் இலங்கையின் முக்கிய எதிர்க் கட்சிகளான அதிபர் சந்திரிகாவின் மக்கள் கூட்டணியும் ஜனதா விமுக்திபெரமுனாவும் ரணிலுக்கு எதிராகப் போர்க் கொடி எழுப்பியுள்ளனர். அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப்போராட்டங்கள் நடத்தவும் இக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
புலிகளிடம் ரணில் சரணடைந்து விட்டார் என்று கூறி நேற்றே போராட்டங்களும் அரசுக்கு எதிரான பிரச்சாரங்கள்தொடங்கி விட்டன.
புலிகள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று புத்த மதப் பிக்குகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதற்காகஅவர்கள் நேற்று ரணிலின் அலுவலகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர்.
இந்தச் சூழ்நிலையில் சந்திரிகா இந்தியாவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் மற்றும் பிரதமர் வாஜ்பாய் ஆகியோரைச் சந்திக்கவிருக்கும் சந்திரிகா, தமிழக முதல்வர்ஜெயலலிதாவையும் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications