அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்திய தீவிரவாதி
மதுரை:
மதுரை அருகே உள்ள கல்லுப்பட்டியில் மாறுவேடம் அணிந்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தும்வித்தியாசமான விழா நேற்று நடந்தது.
திருமங்கலம் அருகே உள்ளது டி.கல்லுப்பட்டி. இங்குள்ள புது மாரியம்மன் கோவிலில் சித்திரைத்திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் இந்த வித்தியாசமான விழா நடந்து வருகிறது.
தங்கள் வேண்டுதல்கள் நிறைவேற இக் கோவிலில் வேண்டிக் கொள்பவர்கள் சித்திரைத் திருவிழாவின்போது மாறுவேடத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
சாமி, எனது வேண்டுதல் நிறைவேறினால் இந்த வேடத்தில் வந்து நேர்த்திக் கடன் செலுத்துகிறேன் என்றுவேண்டிக் கொள்ள வேண்டுமாம்.
இந்த நேர்த்திக் கடன் செலுத்தும் விழா நேற்று நடந்தது.
இதில் ராமர், முருகன், லட்சுமணன் போல வேடமிட்டு பலரும் வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.
அப்போது ஒருவர் கையில் துப்பாக்கியுடன், கறுப்பு உடையுடன் தீவிரவாதி மாதிரி வர அனைவரும்அதிர்ச்சியடைந்தனர். அப்புறம் தான் தெரிந்தது அவர் தீவிரவாதி மாதிரி வந்து நேர்த்திக் கடனை செலுத்துவதாகவேண்டியிருந்தாராம்.
தனது வேண்டுதல் நிறைவேறியதையடுத்து அவர் சாட்சாத் தீவிரவாதி மாதிரியே வேடமிட்டு வந்து தனது நேர்த்திக்கடனைச் செலுத்தி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார்.
அவரைத் தொடர்ந்து இன்னொருவர் வந்தார். மீசையை மழித்துவிட்டு அலி போல சேலை கட்டி, அவர்களைப்போலவே நடந்து வந்த அவர், என்னக்கா அப்படி பாக்குறீங்க.. என்று அவர்களின் குரலிலேயே பேசிபடி தனதுநேர்த்திக் கடனை செலுத்தினார்.












Click it and Unblock the Notifications