சட்டசபையில் உயர்ந்த மைக் !!
சென்னை:
சட்டசபையில் உள்ள உயரமான எம்.எல்.ஏக்களுக்கு உயரமான மைக் அளிக்கப்பட வேண்டும் என்றகோரிக்கையைத் தொடர்ந்து, திமுக எம்.எல்.ஏ. நெப்போலியனுக்கும், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜு சந்தானத்துக்கும்உயரமான மைக்குகள் வைக்கப்பட்டன. ஆனால் கோரிக்கை விடுத்த சுயேச்சை எம்.எல்.ஏவான அப்பாவுக்குஇன்னும் மைக் கிடைக்கவில்லை.
சமீபத்தில் சட்டசபையில் அப்பாவு பேசியபோது, "என்னைப் போன்ற உயரமானவர்களுக்கு சட்ட சபையில்உயரமான மைக் வைக்கப்பட வேண்டும். மைக் உயரத்திற்கு குனிந்து பேச முடியவில்லை. அப்படி குனிந்துபேசுவதால் சபாநாயகர் முகத்தைக்கூட பார்த்துப் பேச முடிவதில்லை என்று கூறினார்.
"அனைவரும் பணிந்து நடக்க வேண்டும் என்பதால்தான் குட்டையான மைக்குகள் வைக்கப்பட்டுள்ளன" என்றுசபாநாயகர் காளிமுத்து கூறியபோது சபையில் பலத்த சிரிப்பொலி எழுந்தது.
மேலும், அப்பாவுவின் கோரிக்கையை ஏற்று உயரமானவர்களுக்கு உயரமான மைக்குகளை வைக்க காளிமுத்துஉத்தரவிட்டார்.
அதன்படி நேற்று (திங்கள்கிழமை) சட்டசபையில் நெப்போலியனுக்கும் ராஜு சந்தானத்துக்கும் உயரமானமைக்குகள் பொருத்தப்பட்டன.
ஆனால் கோரிக்கையை விடுத்த அப்பாவு உயர மைக் இல்லாமல் விழித்துக் கொண்டிருந்தார். அவருக்குநாளைதான் உயரமான மைக் வைக்கப்படும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications