நாயுடு பயம்: எம்.பிக்களை வளைக்கிறது பா.ஜ.க.

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் முதல்வரை நீக்கக் கோரி எதிர்க் கட்சிகள் கொண்டு வந்துள்ள ஒட்டெடுப்புடன் கூடிய தீர்மானத்திற்குதுணை சபாநாயகர் அனுமதி தந்துள்ளார்.

தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தால் தெலுங்கு தேசம் கட்சி மத்திய அரசுக்கு ஆதரவாக வாக்களிக்குமாஎன்பது சந்தேகத்திற்கிடமாகவே உள்ளது.

வன்முறையைத் தூண்டிவிட்டு வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று கடும் எதிர்ப்புக்குரல் கொடுத்து வருபவர் தெலுங்கு தேசம் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு.

அவரது ஆதரவில் ஆட்சியை நடத்தி வரும் மத்திய பா.ஜ.க. அரசு அவரது கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

இதையடுத்து இந்த விவகாரத்தில் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்தது தெலுங்கு தேசம். கடந்த 6 நாட்களாக எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த வேண்டும் என்று கோரிநாடாளுமன்றத்தையே ஸ்தம்பிக்க வைத்தன.

அப்போது தெலுங்கு தேசமும் எதிர்க் கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜ.க. அரசுடன் மோதியது.

இந் நிலையில் வாக்குகெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு இன்று சபாநாயர் அனுமதி தந்துவிட்டார். இதனால்,மோடியை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து முடிந்தவுடன் இது தொடர்பாக ஓட்டெடுப்பு நடக்கும்.

அப்போது தெலுங்கு தேசம் எப்படி நடந்து கொள்ளும் என்பது தெரியாததால் பா.ஜ.கவினர் பெரும் கவலையில்ஆழ்ந்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அரசை ஆதரித்து வாக்களிப்பதா, இல்லை எதிர்த்து வாக்களிப்பதா என்பது குறித்து கட்சியின்அரசியல் குழுவும், தலைவர் சந்திர பாபு நாயுடுவும் முடிவு செய்வார்கள் என்று அக் கட்சியின் நாடாளுமன்றஎம்.பிக்கள் குழுத் தலைவர் எர்ரன் நாயுடு தெரிவித்துள்ளார்.

இப்படி தெலுங்கு தேசம் பிடிகொடுக்காமல் பேசி வருவது பிரதமர் வாஜ்பாயையும் உள்துறை அமைச்சர்அத்வானியையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

அதே போல எப்போது எதைச் செய்வார் என்று சொல்லவே முடியாத திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாபானர்ஜியும் இதுவரை ஓட்டெடுப்பில் எப்படி வாக்களிப்போம் என்று ஏதும் பேசாமல் இருந்து வருகிறார்.

இதில் நாயுடுவிடம் 28 எம்.பிக்களும் மம்தாவிடம் 9 எம்.பிக்களும் உள்ளனர். இவர்கள் மோடியை நீக்கும்தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தாலும் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 2 எம்.பிக்கள் அதிகம் இருப்பார்கள்.

ஆனால், தீர்மானத்தை லோக் ஜன்சக்தி, ஐக்கிய ஜனதா தளம் போன்றவை ஆதரித்து ஏதாவது ஏடாகூடமாகநடந்துவிடலாம் என்ற அச்சம் பா.ஜ.கவை வாட்ட ஆரம்பித்துள்ளது.

இந்த விவகாரத்தில் கடைசி நேரத்தில் நாயுடு எப்படி வேண்டுமானாலும் நடந்து கொள்வார் என்றுஅஞ்சப்படுவதால் உடனடியாக பிற கட்சி எம்.பிக்களை வளைத்துப் போடும் வேலைகள் ஆரம்பித்துள்ளன.

உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் நாற்காலியைக் காட்டி மாயாவதியையும் கன்சிராமையும் வளைத்துள்ள பா.ஜ.க.அக் கட்சி எம்.பிக்களின் ஆதரவைக் கோரியுள்ளது.

அதே போல சுயேச்சைகள், பிற கட்சிகளில் உள்ள அதிருப்தி எம்.பிக்களையும் பா.ஜ.க. தலைவர்கள் ரகசியமாய்சந்தித்துப் பேசி வருகின்றனர்.

இந்த வேலைகள் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் தலைமையில் தீவிரமாக நடந்துவருகின்றன.

மதசார்பின்மை, சட்டம்-ஒழுங்கு குறித்து வாய்கிழியப் பேசி வரும் மதிமுக, பாமக, திமுக ஆகியவை அரசைஆதரித்து வாக்களிப்போம் என்று அறிவித்துவிட்டன.


இந் நிலையில் குஜராத்தில் இன்றும் நடந்த வன்முறைகளில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். இதனால் கடந்த 3நாட்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+