மோடி பதவி விலக வேண்டும் என்கிறார் ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
குஜராத்தில் நடைபெறும் வன்முறைகளுக்குப் பொறுப்பேற்று அம்மாநில முதல்வர் நரேந்திர மோடி தன்னுடையபதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
சென்னையில் இன்று நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது:
குஜராத்தில் நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களைத் தடுக்க அந்த மாநில அரசு தவறிவிட்டது.
எனவே இந்தச் சம்பவங்களுக்குப் பொறுப்பேற்று மோடி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இந்த விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றம் செயல்படாமல் ஸ்தம்பித்துப்போய்விட்டது. அதற்கு அவசியமே இல்லை. இப்பிரச்சனை குறித்து வெளியிலேயே பேசித் தீர்த்துக் கொள்ளலாம்.
ஆனாலும் இவ்விஷயத்தில் வாஜ்பாய் அரசுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். எந்தவிதத்திலும் பாஜகவுக்குஅளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் மாட்டோம் என்று ராமதாஸ் கூறினார்.












Click it and Unblock the Notifications