எண்ணூ
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேசிய அனல் மின் நிலையமும் தமிழக மின் வாரியமும் இணைந்து எண்ணூர் அருகே 1,000 மெகாவாட்திறனுள்ள மின் நிலையத்தை அமைக்கவுள்ளன என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று கூறினார்.
இதுகுறித்து ஜெயலலிதா தமிழக சட்டசபையில் கூறியதாவது:
மத்திய மின்துறை அமைச்சரான சுரேஷ் பிரபுவிடம் இதுகுறித்து நேற்று மாலை தலைமைச் செயலகத்தில்பேசினேன். அவரும் உடனடியாக இதற்கு ஒப்புக் கொண்டார்.
சுமார் ரூ.5,000 கோடி செலவில் உருவாகவுள்ள இந்த மின் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் நேற்றே தேசிய அனல்மின் நிலையமும் தமிழக மின் வாரியமும் தயாராக இருந்தன.
இருந்தாலும் தற்போது இடைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் முறைப்படியான ஒப்பந்தம் ஜூன்மாதம் முதல் வாரத்தில்தான் கையெழுத்தாகவுள்ளது என்றார் ஜெயலலிதா.
எண்ணூ












Click it and Unblock the Notifications