சைதாப்பேட்டையில் 30,000 போலி வாக்காளர்கள் நீக்கம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சைதாப்பேட்டை தொகுதியில் திருத்தப்பட்ட வாக்களர் பட்டியலில் முன்பிருந்த வாக்காளர் பட்டியலை விட 30,000வாக்காளர்கள் குறைவாக இருந்தனர்.

இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இருந்த வை. பெருமாள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி சென்னையில் நடந்தவன்முறையின்போது மாரடைப்பினால் உயிரிழந்தார்.

இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளுடன்சைதாப்பேட்டை தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

ஆனால் இந்த மூன்று தொகுதிகளிலுமே போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாகப் புகார் எழுந்தது.

இதையடுத்து சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளில் மட்டும் தேர்தலை ஒத்திவைத்துதேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. ஆண்டிப்பட்டி மட்டும் தப்பித்துக் கொண்டது. அத்தொகுதியில் போட்டியிட்டஅதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா, வெற்றி பெற்று தமிழக முதல்வரானார்.

இதற்கிடையே தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய இரு தொகுதிகளிலும்வாக்காளர் பட்டியலைத் திருத்தும் பணி கடந்த மூன்று மாதங்களாக நடைபெற்றது.

இப்பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று (திங்கள்கிழமை) இறுதி வாக்காளர் பட்டியல்வெளியிடப்பட்டது. அதன்படி சைதாப்பேட்டை தொகுதியின் தற்போதைய வேட்பாளர்களின் எண்ணிக்கை2,49,008 ஆகும்.

ஆனால் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலின்போது, சைதாப்பேட்டை தொகுதியில் மொத்தம்2,79,263 வாக்காளர்கள் இருந்தனர்.

ஆக மொத்தம் 30,255 வாக்காளர்களின் பெயர்கள் இறுதி வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

வாணியம்பாடியில்...

கடந்த ஆண்டு மே மாதத் தேர்தலைவிட வாணியம்பாடித் தொகுதியில் 8,011 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியலின்படி இத்தொகுதியில் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,02,784 ஆகும்.

வாணியம்பாடி தொகுதியிலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது தொடர்பாக பிப்ரவரி மாதம் நடக்கவிருந்தஇடைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அச்சிறுப்பாக்கம்:

அச்சிறுப்பாக்கம் தொகுதியில் கடந்த மே தேர்தலின்போது 1,67,541 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது இங்கு314 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+