குஜராத் விவகாரம்: மக்களவையில் 30ம் தேதி விவாதம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் விவகாரம் தொடர்பாக மக்களவையில் வரும் 30ம் தேதி விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு நடைபெறும்என்று நாடாளுமன்ற விவகார ஆலோசனைக் குழு இன்று அறிவித்தது.

வன்முறையைத் தடுக்கத் தவறிய குஜராத் அரசை நீக்கக் கோரி மக்களவையின் 184வது பிரிவின் கீழ் விவாதம்நடத்த வேண்டும் என்ற எதிர்க் கட்சிகளின் கோரிக்கையை மக்களவை சபாநாயகர் பி.எம். சயீது இன்று காலைஏற்றுக் கொண்டார்.

இப்பிரிவின் கீழ் குஜராத் பிரச்சனை தொடர்பாக விவாதம் நடத்தியே தீர வேண்டும் என்று இன்றுடன் சேர்த்து ஏழுநாட்களாக எதிர்க் கட்சி எம்.பிக்கள் மட்டுமில்லாது ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த தெலுங்குதேசம் எம்.பிக்களும் நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்தனர்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் தடைபடுவதைத் தடுத்து நிறுத்த விரும்பிய சயீது, கடந்த வெள்ளிக்கிழமை கூட்டியஅனைத்துக் கட்சிக் கூட்டமும் தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தினமும் கூடுவதும் ஒத்திவைக்கப்படுவதுமாக இருந்தது.

இந்நிலையில் குஜராத் பிரச்சனை தொடர்பாக 184வது பிரிவின் கீழ் விவாதம் நடத்த இன்று (செவ்வாய்க்கிழமை)அனுமதி அளித்தார் சயீது.

குஜராத்தில் சிறுபான்மையினரான முஸ்லீம்களுக்கு எதிராகத் தூண்டப்பட்டுள்ள வன்முறையைக் கட்டுப்படுத்தஅம்மாநில அரசு தவறிவிட்டது குறித்து மக்களவை கவலையடைந்துள்ளது. எனவே இப்பிரச்சனை குறித்துஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று சயீது இன்று மக்களவையில்தெரிவித்தார்.

இதையடுத்து நாடாளுமன்றத்தின் இன்றைய கூட்டம் எந்தவிதமான அமளி துமளியுமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வழக்கமான கேள்வி நேரமும் ஆரம்பித்து விட்டது.

இதற்கிடையே இன்று பிற்பகல் 3 மணிக்குக் கூடிய நாடாளுமன்ற விவகார ஆலோசனைக் குழு, குஜராத்தொடர்பான விவாதத்துடன் கூடிய ஓட்டெடுப்பு வரும் 30ம் தேதி நடைபெறும் என்று அறிவித்தது. இக்கூட்டத்திற்குசயீது தலைமை வகித்தார்.

சயீது சொற்படி நடப்போம் - பாஜக:

இதற்கிடையே சயீது எடுத்துள்ள முடிவுக்குத் தாங்கள் கட்டுப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.

மக்களவை நடவடிக்கைகளை மதித்து சபாநாயகர் கூறும்படி நடந்து கொள்வோம் என்று மத்திய உள்துறைஅமைச்சர் அத்வானி நிருபர்களிடம் கூறினார்.

ராஜ்யசபாவில் இன்றும் அமளி:

இதற்கிடையே எதிர்க் கட்சி எம்.பிக்களின் அமளிக்கு ராஜ்யசபா இன்றும் தப்பவில்லை.

சபை கூடிய சில நிமிடங்களிலெல்லாம் குஜராத் விவகாரம் தொடர்பாக எதிர்க் கட்சி எம்.பிக்கள் பெரும் கூச்சல்,குழப்பம் ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, ஏழாவது நாளாக இன்றும் ஒத்திவைக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+