பொய் வழக்குகளை கண்டித்து ஸ்டாலின் உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதைக் கண்டித்துசென்னை மாநகர மேயர் ஸ்டாலின் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.

கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் மீண்டும் ஆட்சியைப் பிடித்த அதிமுக, பதவியேற்றசில நாட்களிலேயே திமுகவினர் மீது வழக்குகளைத் தொடர ஆரம்பித்தது.

உச்சகட்டமாக கடந்த ஜூன் 29ம் தேதி திமுகவின் தலைவரான கருணாநிதி கைது செய்யப்பட்டதையடுத்து,சென்னையில் பெரும் வன்முறை வெடித்தது.

அதைத் தொடர்ந்து டான்சி வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த ஜெயலலிதா, கடந்தபிப்ரவரி மாதம் ஆண்டிப்பட்டி தொகுதியில் வெற்றி பெற்று மீண்டும் முதல்வரானார். அதுவரை முதல்வராகஇருந்த பன்னீர்செல்வம் காலத்தில் திமுகவினருக்கு எதிரான நடவடிக்கைகள் குறைந்திருந்தன.

பின்னர் மீண்டும் ஜெயலலிதா முதல்வரானதைத் தொடர்ந்து, திமுகவினருக்கு எதிரான நடவடிக்கைகளும் மீண்டும்ஆரம்பித்தன. கடந்த மாதம் தமிழகம் முழுவதும் முன்னாள் திமுக அமைச்சர்களின் வீடுகளில் அதிரடி ரெய்டுகள்நடத்தப்பட்டன.

ஏற்கனவே பல திமுக தொண்டர்கள் மீது வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இவர்கள் மீதும் விரைவில்வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் திமுகவினர் மீது தமிழக அரசு தொடர்ந்து வரும் பொய் வழக்குகளைக் கண்டித்து, ஸ்டாலின்தலைமையில் சென்னையில் இன்று அக்கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

சென்னை-வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் முன்னாள் திமுகஅமைச்சர்களான ஆலடி அருணா, சற்குணப் பாண்டியன், திமுக எம்.எல்.ஏக்களான பரிதி இளம்வழுதி மற்றும்நெப்போலியன் மற்றும் முன்னாள் திமுக எம்.எல்.ஏவான சைதை கிட்டு உள்ளிட்ட நூற்றுக்கணக்கான திமுகவினர்கலந்து கொண்டனர்.

அதிமுகவின் அராஜக ஆட்சிக்கு எதிரான இந்த உண்ணாவிரதப் போராட்டம் தங்களுடைய முதற்கட்ட அறப்போர்என்று நிருபர்களிடம் கூறிய ஸ்டாலின், தங்களுடைய போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

உண்ணாவிரதப் போராட்டம் நடந்த இடத்துக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி அனைவருக்கும் வாழ்த்துத்தெரிவித்தார்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான பெண்களும் கலந்து கொண்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+