சட்டசபையில் இருந்து பொன்முடி, பரிதி சஸ்பெண்ட்: திமுக போராட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் பரிதி இளம்வழுதி, பொன்முடி ஆகியோர் ஒரு நாள் சஸ்பெண்ட்செய்யப்பட்டார்கள். அவர்கள் அவைக் காவலர்களால் வெளியில் தூக்கிச் செல்லப்பட்டனர்.

இன்று கேள்வி நேரம் முடிந்தவுடன் திமுக உறுப்பினர் பொன்முடி எழுந்து,

இடைத் தேர்தல் நடக்கவுள்ள தொகுதிகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இது சட்டவிதிகளுக்கு மாறானது. இது தொடர்பாக ஒரு ஒத்தி வைப்புத் தீர்மானத்தைக் கொடுத்திருந்தேன். அது என்ன ஆனதுஎன்று சபாநாயர் காளிமுத்துவை நோக்கிக் கேட்டார்.

இந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்துக்கு அனுமதி தர சபாநாயகர் காளிமுத்து மறுத்தார்.

இதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று வற்புறுத்தினர்.இதையடுத்து சபாநாயகருக்கும் திமுக உறுப்பினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திமுகவினர் சபாநாயகர் காளிமுத்துவுக்கு எதிராகக் குரல் எழுப்பினர்.

அதிமுகவினர் சபாநாயருக்கு ஆதரவாகக் குரல் எழுப்ப அவையில் அமளி ஏற்பட்டது.

திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசுகையில், இந்த அதிகாரிகள் மாற்றல் விவகாரம் பெரிய பிரச்சனையாகஉருவெடுத்து வருகிறது. இதனால் இது குறித்து விவாதிக்க அந்த ஒத்தி வைப்புத் தீர்மானத்தை எடுத்துக் கொள்ளவேண்டும் என்றார்.

அப்போது பேசிய சபாநாயகர் காளிமுத்து, பரிதி இளம் வழுதியும், பொன்முடியும் ஆபாசமான வார்த்தைகளைப்பேசியுள்ளனர். நேற்றும் அவர்கள் தகாத வார்த்தைகளை அவையில் உபயோகித்தனர். அவையில் இருக்கும் பெண்உறுப்பினர்களின் மனதைப் புண்படுத்தும் வகையில் கண்ணியமற்ற வார்தத்தைகளை உபயோகித்துள்ளனர்.

எனவே அவர்கள் இருவரையும் இந்தக் கூட்டத் தொடரின் எஞ்சி இருக்கும் நாட்கள முழுவதும் அவையில் இருந்துசஸ்பெண்ட் செய்கிறேன். இது தொடர்பான அவை முன்னவர் பொன்னையன் தீர்மானம் கொண்டு வரஉத்தரவிடுகிறேன் என்றார்.

இந்தத் தீர்மானம் பலத்த கூச்சல்-குழப்பங்களுக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து திமுக உறுப்பினர் பரிதி இளம்வழுதி சபாநாயகரின் இருக்கைக்கு எதிரே போய் தரையில் அமர்ந்துதர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து ஆளும் கட்சியினர் அவரை நோக்கி முன்னேற திமுகவினரும் அவர்களைநோக்கி முன்னேற பெரும் அடிதடி நடக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

பரிதியும் பொன்முடியும் தொடர்ந்து அரசைக் கண்டித்தும் சபாநாயகரைக் கண்டித்தும் குரல் எழுப்பிக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக எம்.எல்.ஏக்களும் கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர்.

இதையடுத்து பரிதியையும், பொன்முடியையும் அவையை விட்டு வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு(போலீசார்) சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவர்கள் பரிதியையும் பொன்முடியையும் நெருங்கி வந்து வெளியே வருமாறு அழைத்தனர். ஆனால், இருவரும்வெளியேற முடியாது என்றனர்.

இதையடுத்து அவர்களை அவைக் காவலர்கள் வலுக்கட்டாயமாக கைகளைப் பிடித்து இழுத்தனர். அவர்கள்திமிரவே அவர்களை குண்டுகட்டாகத் தூக்கிச் சென்றனர்.

அவைக்கு வெளியே போய் கீழே விட்டனர். பரிதியையும் பொன்முடியையும் அவைக் காவலர்களைவிட்டுவெளியேற்றியதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

அவைக்கு அனைத்து திமுக உறுப்பினர்களும் தர்ணா போராட்டம் நடத்தினர். சபாநாயகர் காளிமுத்துவுக்கும்அரசுக்கும் எதிராக அவர்கள் கோஷம் எழுப்பினர்.

இந் நிலையில் அவைக்கு உள்ளே இருந்த பிற எதிர்க் கட்சியினர் பரிதியையும் பொன்முடியையும் கூட்டத் தொடர்முழுவதும் சஸ்பெண்ட் செய்தததைக் கண்டித்துப் பேசினர்.

த.மா.கா, பா.ம.க., மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இந்த சஸ்பெண்ட் உத்தரவைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.

இதையடுத்துப் பேசிய முதல்வர் ஜெயலலிதா, திமுக உறுப்பினர்கள் இருவரையும் கூட்டத் தொடர் முழுவதும்சஸ்பெண்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அவர்களை இன்று ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்தாலேபோதுமானது என்றார்.

இந்தக் கோரிக்கையை சபாநாயகர் காளிமுத்து ஏற்றுக் கொண்டு இருவரையும் ஒரு நாள் மட்டும் சஸ்பெண்ட் செய்வதாக அறிவித்தார்.

இந்தச் சம்பவங்களால் சுமார் 1 மணி நேரம் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் பரபரப்பும் நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+