தாஜ்மஹாலுக்கு சி.ஐ.எஸ்.எப். பாதுகாப்பு
டெல்லி:
ஏழு உலக அதிசயங்களில் ஒன்றும் இந்தியாவின் பெருமையுமான தாஜ்மஹாலுக்கு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பாதுகாப்பளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையக் கட்டடத்தை விமானங்களைக் கொண்டு மோதித் தகர்த்ததீவிரவாதிகள், உலகில் உள்ள மற்ற முக்கியமான கட்டடங்களுக்கும் குறி வைத்துள்ளதாகத் தெரிகிறது.
அந்தக் கட்டடங்களில் ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலும் ஒன்று என்று இந்திய உளவுத்துறை கண்டறிந்துள்ளது. தீவிரவாதிகளின் வயர்லெஸ் செய்தி ஒன்றைஇடைமறித்துக் கேட்டபோது இந்த விவரம் தெரிய வந்தது.
இதையடுத்து தாஜ்மகாலுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு, அதை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்க வேண்டும்என்று உச்ச நீதிமன்ற நீதிபதி ஷா மற்றும் நீதிபதி ஷேமா ஆகியோர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
மே மாதம் 1ம் தேதி முதல் தாஜ்மகாலின் பாதுகாப்பை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினரிடம் உத்தரப் பிரதேசப் போலீசார் ஒப்படைக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications