திருச்சி: கிணற்றில் மிதக்கும் பிணங்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

திருச்சியில் கடந்த 4 நாட்களில் சிறுவன் உள்பட இரண்டு பேர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் எடமலைப்பட்டி அருகே 4 நாட்களுக்கு முன் வொர்க்ஷாப்பில் வேலை பார்த்து வந்த சிறுவன்மர்மமான முறையில் கிணற்றில் பிணமாக மிதந்தான்.

அச் சிறுவன் நீச்சல் தெரிந்தவன் என்பதால் அவன் குளிக்கச் சென்று நீரில் மூழ்கி இறந்திருக்க வாய்ப்பில்லை எனஅவனது குடும்பத்தினர் கூறுகின்றனர். மேலும் குளிக்கச் சென்றவன் மாதிரி இல்லாமல் சட்டை, டவுசருடன் இறந்துமிதந்தான்.

எனவே, அவன் கொலை செய்யப்பட்டுத் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந் நிலையில் அதே எடமலைப்பட்டி அருகே உள்ள கீரப்பாடியை அடுத்த கொல்லக்குளத்தில் நேற்று முன்தினம்மீண்டும் ஒருவர் ஊர் கிணற்றில் பிணமாக மிதந்தார்.

சேகர் என்ற இந்த நபர் வீட்டிலிருந்து வெளியில் சைக்களில் சென்றவர் திரும்பவேயில்லை. இரண்டு நாட்களாகத்தேடப்பட்ட அந்த நபரின் உடல் கிணற்றில் மிதந்தது.

அவரை யாரோ அடித்துக் கொலை செய்து தான் கிணற்றில் வீசியுள்ளனர் என அவரது தாயார் கூறியுள்ளார்.

இந்த இரு சம்பவங்களும் எடமலைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் தான் நடந்துள்ளன. இதனால் இந்தப்பகுதியில் பெரும் அச்சம் நிலவி வருகிறது.

இரவில் தனியே வெளியில் செல்லவே அஞ்சும் நிலைக்கு பொது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+