எல்.டி.டி.ஈ. மிக பயங்கர தீவிரவாத அமைப்பு: சந்திரிகா
டெல்லி:
தீவிரவாதத்தை ஒரு அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறினார்.
தீவிரவாதத்துக்கான காரணத்தை முதலில் கண்டறிந்து அதைக் களைய வேண்டும். அப்படிச் செய்யாமல்தீவிரவாதத்தை ஒழித்துவிட முடியாது. அதே நேரத்தை தீவிரவாதத்தை எந்த அரசும் சகித்துக் கொள்ளவும் கூடாது.
தீவிரவாதத்தை அரசியல் ஆதாயமாகப் பயன்படுத்தும் தனி நபர்கள், இயக்கங்கள் மீது தாமதமின்றி நடவடிக்கைஎடுக்க வேண்டும்.
தெற்காசியா தான் உலகிலேயே மிக மோசமான தீவிரவாதத்தை சந்தித்து வருகிறது. மாலத்தீவுகள் தவிர வேறுஎல்லா தெற்காசிய நாடுகளிலும் ஆயுதம் தாங்கிய அமைப்பினர் வன் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.அல்-காய்தாவின் தலைமையகவே தெற்காசியாவில் தான் இருக்கிறது.
அல்-கொய்தாவும் விடுதலைப் புலிகளும் தான் உலகிலேயே மிக பயங்கரமான, மிக மோசமான தீவிரவாதஅமைப்புகள் என்றார்.
இந் நிகழ்ச்சியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, வெளியுறவுத்துறை இணையமைச்சர் ஒமர் அப்துல்லா,மாதவ்ராவ் சிந்தியாவின் சகோதரியும் மத்திய சிறுதொழில்துறை அமைச்சருமான வசுந்தரா ராஜே, மாதவராவ்சிந்தியாவின் மனைவி மாதவி ராஜே சிந்தியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக முன்னாள் இந்தியப் பிரதமர் ஐ.கே. குஜ்ரால், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications