டெஸ்ட் கிரிக்கெட்: இந்தியா அபார வெற்றி
போர்ட் ஆப் ஸ்பெயின் (வெஸ்ட் இன்டீஸ்):
மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் 37 ரன்கள் வித்தியாசத்தில் அபாரவெற்றி பெற்றதன் மூலம், 26 ஆண்டுகளுக்குப் பிறகு அம்மண்ணில் இந்தியா சாதனை புரிந்துள்ளது.
ஆட்டத்தின் இறுதி நாளான நேற்று, தோல்வியை நோக்கி மிக வேகமாகச் சென்று கொண்டிருந்த இந்திய அணியைஜவகல் ஸ்ரீநாத்தும் ஆஷிஷ் நேஹ்ராவும் தங்களுடைய சிறப்பான பந்து வீச்சால் மீட்டுக் கொண்டு வந்தனர்.
இந்த இருவரும் (தலா 3 விக்கெட்டுகள்) மளமளவென்று விக்கெட்டுகளைச் சாய்த்து இந்தியாவுக்கு வெற்றிவாய்ப்பையும் பெற்றுத் தந்தனர்.
கைகளில் 8 விக்கெட்டுகளை வைத்துக் கொண்டு 182 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐந்தாவதுநாள் ஆட்டத்தைத் தொடங்கியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
முழுதாக ஒருநாள் இருப்பதால் நிச்சயம் அந்த அணி வெற்றி பெற்று விடும் என்றுதான் உலகமே நம்பியது. உணவுஇடைவேளைக்கு முன் அவ்வணியினர் ஆடிய அதிரடி ஆட்டமும் அப்படித்தான் இருந்தது.
கிறிஸ் கெய்ல், பிரையன் லாரா, கார்ல் ஹூப்பர் என்று அனைவரும் இந்தியப் பந்து வீச்சாளர்களின் பந்துகளைஎல்லைக் கோட்டுக்கு விரட்டிக் கொண்டே இருந்தனர்.
ஆனால் உணவு இடைவேளைக்குப் பிறகு புதிய பந்தை எடுக்க இந்தியக் கேப்டன் சவுரவ் கங்குலி முடிவு செய்தார்.அவருடைய முடிவுக்கு நல்ல பலன் இருந்தது. ஒருவர் பின் ஒருவராக மேற்கு இந்தியத் தீவுகள் அணி வீரர்கள்பெவிலியனுக்குத் திரும்ப ஆரம்பித்தனர்.
ஸ்ரீநாத்தும் நேஹ்ராவும் மாற்றி மாற்றி அவர்களுடைய விக்கெட்டுகளைச் சாய்த்துக் கொண்டே போகஆரம்பித்ததும்தான், இந்தியாவின் வெற்றி நம்பிக்கை துளிர் விடத் தொடங்கியது.
313 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணியினர்,ஆட்டத்தை டிரா செய்தாலே போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
ஆனாலும் 275 ரன்கள் எடுத்திருந்தபோது மேற்கு இந்தியத் தீவுகளின் கடைசி ஆட்டக்காரரான கஃப்பியின்விக்கெட்டை ஜாஹீர் கான் சாய்த்து, இந்தியாவின் வெற்றிக் கனவை நனவாக்கினார். 37 ரன்கள் வித்தியாசத்தில்இந்தியா அபார வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் அவுட் ஆகாமல் 69 ரன்களும் இரண்டாவது இன்னிங்சில் 74 ரன்களும் எடுத்த வி.வி.எஸ்.லக்ஷ்மண் "மேன் ஆப் த மேட்ச்" விருதைப் பெற்றார்.
மேற்கு இந்தியத் தீவுகள் மண்ணில் 26 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா டெஸ்ட் வெற்றி பெற்றுள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஸ்கோர் விவரம்:
இந்தியா - 339, 218
மேற்கு இந்தியத் தீவுகள் - 245, 275
டெண்டுல்கர் சாதனை:
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில்தான் தன்னுடைய 29வது டெஸ்ட் செஞ்சுரியைஎடுத்து இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் சாதனை படைத்தார்.
உலகப் புகழ் பெற்ற டான் பிராட்மேனின் சாதனையையும் அப்போது டெண்டுல்கர் சமன் செய்தார் என்பதுகுறிப்பிடத்தக்கது. இன்று (புதன்கிழமை) டெண்டுகரின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications