தலித் பஞ்சாயத்துக்களுக்கு மீண்டும் தேர்தல்
திண்டுக்கல்:
தேர்தல் நடத்தப்படாமல் உள்ள 4 தலித் பஞ்சாயத்துகளுக்கு இன்னும் 6 மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்றுமாநில தேர்தல் கமிஷனர் பழனிச்சாமி கூறினார்.
திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பழனிச்சாமி பேசுகையில்,
பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டதால் அவை காலியாக உள்ளன. இதுதவிர கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்கச்சியேந்தல் ஆகியபஞ்சாயத்துக்களுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டியுள்ளது.
இவை அனைத்திற்கும் சேர்த்து இன்னும் ஆறு மாதத்தில் தேர்தல் நடத்தப்படும்.
இந்த பஞ்சாயத்துக்களின் வழக்கமான பணிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக சிறப்பு அதிகாரிகள்நியமிக்கப்பட்டு பணிகள் மேற்பார்வையிடப்பட்டு வருகின்றன என்றார் பழனிச்சாமி.
தலித் பஞ்சாயத்துக்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக தேர்தல் நடத்த முடியவில்லை. பெரும்பான்மைஜாதிக்காரர்களின் மிரட்டலுக்குப் பயந்து தலித் வேட்பாளர்கள் யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை.
இதனால் தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. சமீபத்தில் பாப்பாப்பட்டி மற்றும் கீரிப்பட்டிக்கு மட்டும் தேர்தல்நடந்தது. இதிலும் கூட கிராமத்தினர் சார்பில் பொதுவாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
அதிலும் கூட பாப்பாப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட தனிக்கொடி பதவியேற்ற சிலநாட்களிலேயே பதவியை ராஜினாமா செய்து விட்டார். கீரிப்பட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் கருத்தகண்ணனோ பதவியேற்ற அடுத்த நிமிடமே தன் பதவியை ராஜினாமா செய்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications