குஜராத்: அகதி முகாம்களில் அம்மை நோய் பரவுகிறது
அகமதாபாத்:
குஜராத்தில் வன்முறையாளர்களால் விரட்டி விடப்பட்டு முகாம்களில் தங்கியுள்ள மக்கள் மஞ்சள் காமாலை மற்றும்அம்மை நோயால் தாக்கப்பட்டு வருகின்றனர்.
குஜராத்தில் கடந்த 2 மாதமாக நடந்து வரும் மதக் கலவரங்களில் இதுவரை 900 பேர் உயிரிழந்துள்ளனர்.ஆயிரக்கணக்கான மக்களின் வீடுகள் எரிக்கப்பட்டுவிட்டன. அவர்களின் கடைகளும் எரிக்கப்பட்டுவிட்டன.
இதனால், இவர்கள் அரசு அமைத்துள்ள முகாம்களில் வசித்து வருகின்றனர். ஒரே முகாமில்ஆயிரக்கணக்கானவர்கள் தங்கியுள்ளனர். இந்த முகாம்களில் உணவு தரப்படுகிறது. மற்றபடி எந்த வசதியும்கிடையாது.
பொதுவான சில கழிப்பிடங்களே உள்ளதால் முதலில் இவர்களை வயிற்றுப்போக்கு நோய் தாக்கியது.
இப்போது இங்கு தஞ்சம் புகுந்துள்ள மக்களிடையே அம்மை நோய் பரவ ஆரம்பித்துள்ளது. ஒரு பெரிய அறையில்ஆயிரக்கணக்கானவர்கள அடைக்கப்பட்டுள்ளதால் இந்த நோய் மிக வேகமாகப் பரவி வருகிறது.
சுகாதாரமில்லா சூழ்நிலையில் வசித்து வரும் இவர்கள் மஞ்சள் காமாலையாலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதுவரை 120 பேர் அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 19 பேர் குழந்தைகள். இவர்களுக்கு மருத்துவஉதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் அரசு அமைத்துள்ள இந்த முகாம்களில் சுமார் 1 லட்சம் பேர் உயிருக்குஅஞ்சியும், வீடுகள் எரிக்கப்பட்டுவிட்டதாலும் தஞ்சம் புகுந்துள்ளனர். இதில் 90 சதவீதத்தினர் முஸ்லீம்கள்.
குஜராத்தில் கடும் வறட்டி நிலவுவதால் இந்த முகாம்களில் தண்ணீர் வசதியும் போதுமானதாக இலலை. மிகக்குறுகலான இடங்களில் இவர்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றனர்.
இந்த முகாம்களை மாநில பாரதீய ஜனதா அரசு மிக அலட்சியப்போக்குடன் நடத்தி வருவதாக சர்வதேச மனிதஉரிமைகள் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்த உள்நாட்டு அகதிகளுக்கு உணவு கூட போதுமான அளவுவழங்கப்படவில்லை. தண்ணீர் வசதியும் இல்லை. பெரும்பாலானவர்கள் தங்களுக்கு நடந்த தாக்குதல் குறித்த மனஅதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இந் நிலையில் இன்றும் குஜராத்தில் கலவரம் நடந்தது. அகமதாபாத்தில் நடந்த கலவரத்தை அடக்க போலீசார்துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
இந்தக் கலவரங்களை மாநில அரசே முன்னின்று நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்துமாநில பா.ஜ.க. முதல்வர் நரேந்திர மோடியை நீக்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் கோரிக்கைஎழுந்துள்ளது.
ஆனால், இதை மத்திய பா.ஜ.க. அரசு ஏற்க மறுத்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக வரும் 30ம் தேதிநாடாளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய கண்டனத் தீர்மானம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இத் தீர்மானத்தை எதிர்க் கட்சிகள் கொண்டு வந்தாலும் கூட தேசிய ஜனநாயக முன்னணியில் உள்ள பல கட்சிகளும்ஆதரித்துள்ளன. இக் கட்சிகளும் கலவரத்தைக் கட்டுப்படுத்தாமல் அதை தூண்டிவிட்டு வரும் மோடியை நீக்கவேண்டும் என்று கோரியுள்ளன.
ஆனால், மோடியை நீக்கக் கூடாது என ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ ஹிந்து பரிஷத், சிவ சேனை, பஞ்ரங் தள் ஆகியஅமைப்புகள் பிரதமர் வாஜ்பாயை நிர்பந்தித்து வருகின்றன.
இந்தக் கலவரங்கள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றகோரிக்கையை உள்துறை அமைச்சர் அத்வானி ஏற்க மறுத்துவிட்டார். இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது எனநாடாளுமன்றத்தில் அவர் இன்று தெரிவித்தார்.
விசாரித்தால் உண்மை தெரிந்துவிடும் என்ற பயத்தினால் தான் இதை பாஜக ஏற்க மறுப்பதாக காங்கிரசும்,கம்யூனிஸ்ட் கட்சிகளும் கருத்துத் தெரிவித்துள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications