பாகிஸ்தான் சிறைகளில் வாடும் 1,129 இந்தியர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாகிஸ்தான் சிறைகளில் 263 மீனவர்கள், 54 போர்க் கைதிகள் உள்பட 1,129 பேர் அடைக்கப்பட்டுள்ளதாக இன்றுலோக்சபாவில் அறிவிக்கப்பட்டது.
வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் இந்தத் தகவல்கள்கூறப்பட்டுள்ளன.
தங்களிடம் எந்த இந்தியப் போர்க் கைதியும் கிடையாது என்று பாகிஸ்தான் தொடர்ந்து கூறி வந்துள்ளது.
ஆனாலும் 54 போர்க் கைதிகள் பாகிஸ்தான் சிறைகளில் இருப்பதாக உறுதியுடன் தான் நம்புவதாக ஜஸ்வந்த் சிங்கூறியுள்ளார்.
பாகிஸ்தான் சிறைகளில் வாடி வரும் 1,129 இந்தியர்களையும் விடுவிக்க அனைத்து வகையான முயற்சிகளும்மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவ்வறிக்கையில் ஜஸ்வந்த் சிங் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications