பெண் சிசுவைக் கொன்று புதைத்த போலீஸ்காரர் கைது

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்:

நாமக்கல் அருகே தங்களுடைய நான்கு மாதப் பெண் சிசுவைக் கொன்று கிணற்றில் வீசிய போலீஸ்காரர்ஒருவரையும் அவருடைய மனைவியையும் போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள மூலக்காட்டைச் சேர்ந்த பழனிமுத்து (39), நாமக்கல்ஆயுதப்படையில் போலீஸ்காரராகப் பணிபுரிந்து வந்தார். பின்னர் அவர் சேலம் மாநகரப் போலீஸ் கட்டுப்பாட்டுஅறைக்கு மாற்றப்பட்டார்.

பழனிமுத்து அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவி மலர்க்கொடியுடன் (30) தகராறு செய்வாராம். இதனால்அடிக்கடி அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, அவ்வப்போது பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

குடிப்பழக்கத்தால் ஒழுங்காக அவர் வேலைக்குப் போகாத காரணத்தால் அவர் சமீபத்தில் சஸ்பெண்ட்செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) குடிபோதையுடன் வந்த பழனிமுத்து, மனைவியுடன் தகராறுசெய்தார். பின்னர் தன்னுடைய நான்கு மாதக் குழந்தையான நந்தினியை எடுத்துக் கொண்டு வெளியே சென்றபழனிமுத்து, வீட்டுக்குப் பின்புறம் உள்ள கிணற்றில் வீசினாராம்.

இதனால் குழந்தை நந்தினி அதே இடத்தில் உயிரிழந்தாள். பயந்துபோன பழனிமுத்துவும் மலர்க்கொடியும்குழந்தையை எடுத்து கிணற்றுக்குப் பக்கத்திலேயே குழி தோண்டிப் புதைத்து விட்டனர்.

இந்த விஷயம் ஊருக்குள் மெல்ல மெல்லப் பரவ ஆரம்பித்தவுடன், மலர்க்கொடி நேராக கிராம நிர்வாகஅதிகாரியான செல்வராஜிடம் சென்று நடந்ததைக் கூறிவிட்டார்.

இதையடுத்து செல்வராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் பழனிமுத்துவையும் மலர்க்கொடியையும்சேந்தமங்கலம் போலீசார் கைது செய்தனர். குழந்தை நந்தினியின் சடலமும் தோண்டியெடுக்கப்பட்டு, அந்தஇடத்திலேயே போஸ்ட்மார்ட்டமும் நடத்தப்பட்டது.

இச்சம்பவம் குறித்து தம்பதியர் இருவருமே போலீசாரிடம் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிவருகின்றனர்.

இவர்களுக்கு ஏற்கனவே 11 வயதில் வினோதினி என்ற பெண் குழந்தை உண்டு. இந்நிலையில் தான் சஸ்பெண்ட்செய்யப்பட்டபோது நந்தினி பிறந்ததால், குடிகார பழனிமுத்து அந்தக் குழந்தையைக் கொன்றுவிட்டதாகக்கூறப்படுகிறது.

குழந்தை இருந்த காரணத்தினால்தானே தகராறு ஏற்படுகிறது என்று கருதிய மலர்க்கொடியே நந்தினியைக் கொலைசெய்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+