போலீசாரிடம் சொல்லி விட்டுச் சென்றவர் வீட்டிலேயே 15 பவுன் நகை "அபேஸ்"
சென்னை:
பாதுகாப்புக்காக தான் ஊருக்குப் போவதை முன்கூட்டியே போலீஸ் நிலையத்தில் சொல்லிச் சென்றவர் வீட்டில்திருடர்கள் கைவரிசையைக் காட்டி 15 பவுன் நகையை லவட்டிக் கொண்டு சென்று விட்டனர்.
சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. சென்னைமக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ள இந்த தொடர் கொள்ளைச் சம்பவங்களால் சென்னைப் போலீசாருக்கும்பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.
திருட்டு போன்ற சம்பவங்களைத் தடுக்க வெளியூருக்குப் போகும் பொதுமக்கள் அருகிலுள்ள போலீஸ்நிலையத்தில் தெரிவித்தால் தகுந்த பாதுகாப்பு கொடுக்கப்படும் என்று சென்னை மாநகரப் போலீஸ் கமிஷனர்விஜயகுமார் அறிவித்திருந்தார்.
அதன்படி போலீசாரிடம் சொல்லிச் சென்றவர் வீட்டிலேயே திருட்டு நடந்துள்ளதுதான் வேடிக்கை.
ஆவடி நந்தவன மேட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலு. இவர் தனது குடும்பத்தினருடன் வெளியூர் செல்ல இருந்தார்.இதையடுத்து கமிஷனர் கூறியபடி ஆவடி போலீஸ் நிலையத்திற்குச் சென்று தான் எந்த ஊருக்குப் போகிறேன்,திரும்பி வர எத்தனை நாட்களாகும், வீட்டில் உள்ள பொருட்கள் ஆகியவற்றைக் குறித்துத் தெரிவித்து விட்டுநிம்மதியாக ஊருக்குப் போனார்.
இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை ஊருக்குத் திரும்பினார் பாலு. பூட்டைத் திறக்கப் போனவருக்கு"பக்" என்று ஆகி விட்டது.
போலீசாரிடம் சொல்லி விட்டு சென்றோமே என்ற நிம்மதியுடன் ஊருக்குச் சென்று வந்தால், வீட்டின் பூட்டுஉடைக்கப்பட்டு, உள்ளே பீரோவில் இருந்த 15 பவுன் நகை திருடப்பட்டு இருப்பதைப் பார்த்தால் பின்னர்எப்படியிருக்கும்?
மீண்டும் அதே போலீஸ் நிலையத்தில் இதுதொடர்பாக பாலு புகார் கொடுத்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications