பண்ருட்டி விஷச் சாராய சம்பவம்: மும்பை குற்றவாளி கைது
கடலூர்:
பண்ருட்டியில் சில மாதங்களுக்கு முன் 50க்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய விஷச் சாராயச் சம்பவம்தொடர்பாக மும்பை குற்றவாளி ஒருவனைப் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டியை அடுத்த புதுப்பேட்டை, நத்தம், மேல்அருங்குணம், ஓரையூர் பகுதிகளில் கடந்த ஆண்டு நவம்பர்29ஆம் தேதி விஷச்சாராயம் குடித்து 53 பேர் வரை இறந்தனர். 20க்கும் மேற்பட்ட மக்கள் கண்பார்வை இழந்தனர்.
இதுகுறித்து போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையின்போது கிடைத்த தகவலின் பேரில் அவர்கள்பாண்டிச்சேரி சாராய வியாபாரியான சக்திவேல் மற்றும் அவரது கூட்டாளிகள் பலரை கைது செய்து விசாரித்தனர்.
சென்னையைச் சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவர் மூலமாக மும்பையிலிருந்து அவர்கள் சாராயம் வாங்கியதுதெரிய வந்தது. மும்பையைச் சேர்ந்த சக்தி அஹர்வாலிடமிருந்து மெத்தனாலை வாங்கி துர்கேஷ் குமார் சிங்என்பவர் சென்னை பிரமுகருக்கு அனுப்பிய விவரமும் தெரிய வந்தது.
பின்னர், போலீசார் இது தொடர்பாகப் பலரையும் கைது செய்தனர். தலைமறைவான மூவரை தீவிரமாக தேடிவந்தனர்.
இந்நிலையில் தலைமறைவான துர்கேஷ் மும்பையிலுள்ள கணேஷ் மந்திர் என்ற இடத்தில் இருப்பதாகத் தெரியவந்தது. இதையடுத்து மும்பை விரைந்த தமிழகப் போலீசார் அவரைக் கைது செய்தனர்.
பின்னர் தமிழகத்திற்குக் கொண்டுவரப்பட்ட துர்கேஷ், நேற்று முன்தினம் பண்ருட்டி மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில்ஆஜர்படுத்தப்பட்டார். அவரை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், சிங்கை 15 நாள் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.அதன்படி துர்கேஷ் சிறைக்காவலில் வைக்கப்பட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications