போலீசை விட்டு என் வீட்டை சூறையாடினார் கருணாநிதி: ஜெ. குற்றச்சாட்டு
சென்னை:
திமுக ஆட்சியின் போலீசாரைத் தூண்டிவிட்டு என்னைக் கைது செய்தது மட்டுமல்லாமல், என் வீட்டையும்சூறையாடினார் கருணாநிதி என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கான மானியக் கோரிக்கைகள் மீது இன்று விவாதம் நடந்தது. அப்போதுஜெயலலிதா கூறியதாவது:
தமிழகப் போலீசாரைத் தங்களுடைய ஆயுதமாகத்தான் திமுக தலைவரான கருணாநிதி முதல் அனைத்து திமுகஅமைச்சர்களும் திமுகவினரும் பயன்படுத்திக் கொண்டனர்.
கடந்த 1997ல் திமுக அரசின் உத்தரவுப்படி என் வீட்டுக்குள் நுழைந்த போலீசார், என்னைக் கைது செய்ததோடுமட்டுமல்லாமல் என் வீட்டையும் சூறையாடினர்.
எந்தப் போலீசாரும் இப்படியெல்லாம் செய்ய மாட்டார்கள். ஆனால் திமுக தலைமைதான் இவ்வாறெல்லாம்செய்வதற்குத் தமிழகப் போலீசாரைத் தூண்டி விட்டது.
இப்படி தமிழகப் போலீசாரை தானாகவே செயல்பட விடாமல் திமுக அரசு தடுத்து விட்டது.
உச்சகட்டமாக 1998ல் கோயம்புத்தூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்புக்களைக் கூறலாம். போலீசாரை நன்குபயன்படுத்தியிருந்தால் இந்தக் குண்டு வெடிப்புக்களை எப்படியேனும் தவிர்த்திருக்கலாம். ஆனால் கருணாநிதிஅதைச் செய்யத் தவறினார்.
கொடியங்குளம் மற்றும் சங்கரலிங்கபுரத்தில் நடந்த சம்பவங்களையும் கோயம்புத்தூர் குண்டு வெடிப்புசம்பவத்தையும் ஒப்பிட்டுப் பேசக் கூடாது. கோயம்புத்தூர் குண்டு வெடிப்பு மிகவும் கொடுமையான சம்பவமாகும்என்றார் ஜெயலலிதா.
மத்திய உளவுத் துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அப்போதைய திமுக அரசு சுதாரித்துச் செயல்பட்டிருந்தால்,கோயம்புத்தூர் குண்டு வெடிப்புக்களைத் தவிர்த்திருக்கலாம் என்று சட்டசபையின் தமாகா தலைவரான எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியமும் கூறினார்.
தான் கைது செய்யப்பட்டது குறித்து ஜெயலலிதா பேசிக் கொண்டிருந்தபோது இடைமறித்த திமுக உறுப்பினரானதுரைமுருகன், நீங்களும் எங்கள் தலைவர் கருணாநிதியை நடு இரவில் கைது செய்யச் சொல்லித்தானேஉத்தரவிட்டீர்கள் என்றார்.
அதன் பிறகு பேசிய அதிமுக எம்.எல்.ஏவான அன்வர் ராஜா, "தமிழகத்தில் தற்போது "மினி எமர்ஜென்சி" நடக்கிறதுஎன்று கருணாநிதி கூறினார். திமுக ஆட்சிக் காலத்தில்தான் சிறையிலிருந்த ஜெயலலிதாவைப் பார்ப்பதற்குக் கூடஅனுமதி மறுக்கப்பட்டது. ஒரு அறிக்கை வாங்கி வரக் கூட அவரைச் சந்திக்க போலீசார் எங்களைஅனுமதிக்கவில்லை என்றார்.
அப்போது இடைமறித்த துரைமுருகன், எந்த அரசாவது கைதிகளை அறிக்கை வெளியிட அனுமதித்துள்ளதா?என்று கேட்டார்.
புதிய சட்டம் வருகிறது:
தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில்,
தமிழக காவல்துறை நவீனமாக்கப்படும். மேலும் திட்டமிட்டு குற்றச் செயல்களில் கும்பல்களைத் தடுத்த புதியசட்டம் கொண்டு வரப்படும்.
பணம் வாங்கிக் கொண்டு கூலிக்கு ஆட்களைக் கொலை செய்யும் காண்ட்ராக்ட் கொலைக் கும்பல்கள், காசுக்குஆட்களைக் கடத்தும் கும்பல்கள், சட்ட விரோதமாக ஆயுதங்களைத் தயாரிக்கும் கும்பல்களைத் தடை செய்யமகாராஷ்ட்ராவில் இருப்பது போல ஒரு கடுமையான சட்டம் கொண்டு வரப்படும்.
கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், போதை மருந்து கடத்தல் கும்பல், பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துபவர்கள்,சிறுவர்களை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுத்துபவர்கள், போலி நிதி நிறுவனங்கள் ஆகியவை மீதும் கடுமையானநடவடிக்கை எடுக்க இந்தச் சட்டம் உதவும்.
கடத்திச் சென்று பணம் பறிப்பது, காசுக்காக ஆட்களைக் கடத்துவது, கொலை செய்வது போன்ற செயல்கள்அதிகரித்து வருவது கவலை தருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்தப் புதிய சட்டத்தின் மூலம் இன்டர்நெட் குற்றங்களும் தடுக்கப்படும். ஈவ்-டீசிங் தொடர்பான சட்டம் மேலும்கடுமையாக்கப்படும்.












Click it and Unblock the Notifications