கார்களில் இனி சீட் பெல்ட் கட்டாயம்
சென்னை:
கார் ஓட்டுனர் மற்றும் அதன் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட்பெல்ட்டைப் போட்டுக் கொள்ளவேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
காரில் உள்ள அனைவருமே சீட்பெல்ட் அணிந்து செல்வது வரும் அக்டோபர் 1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
இந்தச் சட்டம் விபத்தின் போது உயிரிழப்பைத் தடுப்பதற்காகக் கொண்டு வரப்படுப்பட்டுள்ளது. மத்திய அரசின்அறிவிப்பைத் தொடர்ந்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை பற்றிய விவரம்:
கார் ஓட்டுனர்கள் மற்றும் முன் இருக்கையில் அமர்ந்திருப்பவர்கள் சீட்பெல்ட் அணிய வேண்டும் என்றுஅறிவுறுத்தப்பட்டது. பஸ்கள், இரு சக்கர வாகனங்களைத் தவிர்த்து மற்ற வாகனங்களை தயாரிப்போர் சீட்பெல்டுடன் வாகனங்களை வடிவமைகக வேண்டும்.
தற்போது அதிக சாலை விபத்துக்கள் நடப்பதால், விபத்து நடக்கும்போது உடல் வாகனத்திலிருந்து தூக்கிவீசப்படாமல் இருக்க இந்த சீட்பெல்ட் உதவும்.
மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து காரில் முன் இருக்கையில் அமர்ந்து பயணிப்போர் சீட்பெல்ட் அணிவதைகட்டாயமாக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications