பிறந்த நாளன்று ரயில் மோதி பெண் சாவு
Subscribe to Oneindia Tamil
தருமபுரி:
பிறந்த நாள் இனிப்புகளை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் கொடுக்கச் சென்ற இளம் பெண் ரயிலில் அடிபட்டுஇறந்தார்.
தருமபுரி செந்தில் நகரைச் சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு நேற்று (புதன்கிழமை) பிறந்த நாள்.
இதையடுத்து தான் செய்திருந்த இனிப்பு வகைகளை தனது நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுக்கச்சென்றார்.
ரயில்வே தண்டவாளத்தை அவர் கடந்தபோது அவ்வழியாக வந்த கோவை-பெங்களூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்ரயில் மோதி சாந்தி பலியானார்.
இதுகுறித்து ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications