இடைத் தேர்தலில் போட்டியா? - மே 4ல் பா.ஜ.க. முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சட்டசபை இடைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி மேற்கொள்ள வேண்டிய நிலை குறித்து மே 4ம் தேதிமுடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தமிழகத் துணைத் தலைவரான வேலாயுதம் கூறினார்.
நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் வேலாயுதம் பேசுகையில்,
நடைபெறவுள்ள சட்டசபை இடைத் தேர்தலில் பாஜக கட்சியின் நிலை குறித்து வருகிற மே 4ம் தேதிமுடிவெடுக்கப்படும்.
தமிழக பாஜகவுடன் உறவு இல்லை என்று திமுக கூறியுள்ளது. அதே முடிவைத்தான் பாஜகவும்மேற்கொண்டுள்ளது.
அதிமுகவுடன் உறவு வைப்பது குறித்து இதுவரை யோசிக்கவில்லை. இடைத் தேர்தலில் எந்தக் கட்சியின்ஆதரவைப் பெறுவது என்பது குறித்து 4ம் தேதிதான் முடிவெடுக்கப்படும் என்றார் வேலாயுதம்.












Click it and Unblock the Notifications