ஆந்திராவிலிருந்து 73 தமிழ் கொத்தடிமைகள் மீட்பு
சென்னை:
ஆந்திராவில் கொத்தடிமைகளாக இருந்து வந்த 73 தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். தமிழக ஆதிதிராவிடர்நலத்துறையின் கொத்தடிமை ஒழிப்புப் பிவைச் சேர்ந்த அதிகாரிகள் இவர்களை மீட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் காவாலி என்ற பகுதியில் பல ஆண்டுகளாக இவர்கள் கொத்தடிமைகளாக இருந்து வந்தனர்.கொத்தடிமைகள் வழக்கமாகப் பணியாற்றும் கல் குவாரியில்தான் இவர்களும் பணியாற்றி வந்தனர். இவர்கள்அனைவருமே தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
மும்பையைச் சேர்ந்த ஒரு தன்னார்வ நிறுவனம் இந்தக் கொத்தடிமைகள் குறித்து புகார் கொடுத்தது. இதையடுத்துதமிழக கொத்தடிமை ஒழிப்புப் பிரிவின் தனி அதிகாரி டேவிதார் தலைமையில் மீட்புப் பணிகள் நடந்தன.
மீட்கப்பட்டவர்கள் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர். அவர்களது மறுவாழ்வுக்குத்தேவையான நடவடிக்கைகளைத் தமிழக அரசு எடுத்துள்ளது. ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் தலா ரூ.25,000நிவாரண உதவி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இதுவரை தமிழக அரசால் 11,538 கொத்தடிமைகள் மீட்கப்பட்டுள்ளனர்.இதுதொடர்பாக 662 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அரசு செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications