குஜராத்: குண்டு சத்தம் கேட்டு அதிர்ச்சியில் பெண் பலி

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்:

குஜராத்தின் ஷாகிபா பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக் கலைப்பதற்காக போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியபோது ஏற்பட்ட வெடிச் சத்தத்தைக் கேட்டு அருகில் ஒரு நிவாரண முகாமில் இருந்த 70 வயதுப்பெண் ஒருவர் அதிர்ச்சியிலேயே உயிரிழந்தார்.

ஷாகிபா நகரில் உள்ள தார்யகான் கும்மத் என்ற நிவாரண முகாமில் வன்முறையால் பாதிக்கப்பட்டநூற்றுக்கணக்கான மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

இதுபோன்ற முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்குச் சரியான சுகாதார வசதிகள் அளிக்கப்படாததால்,அவர்களுக்கு காலரா, மஞ்சள் காமாலை உள்ளிட்ட பல வியாதிகளும் வெகு வேகமாகப் பரவி வருவதாக நேற்றேசெய்திகள் வெளியாகின.

இந்நிலையில் ஷாகிபா பகுதியில் நேற்று மாலையில் வன்முறை வெடித்தது. வன்முறையில் ஈடுபட்ட கும்பலைக்கலைப்பதற்காகப் போலீசார் தடியடி நடத்தியும் கண்ணீர்ப் புகைக் குண்டுகளையும் வீசினர்.

கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசியபோது ஏற்பட்ட சத்தத்தைக் கேட்டு கும்மத் முகாமில் இருந்த பாத்திமா பீவிஎன்ற 70 வயதுப் பெண் ஒருவர் அதிர்ச்சியிலேயே உயிரிழந்தார்.

வன்முறைக்கு நரோடா பாட்டியாவில் உள்ள தன்னுடைய வீட்டைப் பறிகொடுத்த பாத்திமா, இந்த நிவாரணமுகாமில் தங்கியிருந்தார்.

கண்ணீர்ப் புகைக் குண்டு வீச்சுச் சம்பவத்தில் முகம்மது பாய் என்பவர் தலையில் படுகாயமடைந்தார்.

குஜராத் விவகாரத்தில் தலையிட ஆரம்பிக்கும் வெளிநாடுகள்:

இதற்கிடையே குஜராத் பிரச்சனையில் கனடா, ஐரோப்பா என்று பல வெளிநாடுகளும் தலையிட ஆரம்பித்துவிட்டன.

சில குறிப்பிட்ட சிறுபான்மைச் சமூகத்தினர் மீதுதான் அங்கு பயங்கரமான தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றனஎன்று கூறிய கனடா, இவ்விஷயத்தில் இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று கூறியது.

ஆனால் இந்தியாவின் உள்விவகாரங்களில் கனடா போன்ற வெளிநாடுகள் தலையிடுவதை விரும்பவில்லை என்றுவெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளரான நிருபமா ராவ் நேற்று கூறினார்.

ஒரு வெளிநாட்டின் உள் விவகாரங்களில் தலையிட எங்களுக்கு உரிமை இல்லைதான். ஆனால் இந்தியாஎங்களுடைய நட்பு நாடாக இருப்பதால்தான் நாங்கள் குஜராத் வன்முறை குறித்து கவலை கொள்கிறோம். அதில்தலையிடுவதற்கு எங்களுக்கு உரிமை உள்ளது என்று இந்தியாவிற்கு வருகை தந்துள்ள கனடா அமைச்சரானஸ்டீபானி பியோன் இன்று பெங்களூரில் கூறினார்.

குஜராத்தில் நிலைமை நன்றாக இருந்தால், அதற்காக நாங்கள் மகிழ்ச்சியடைவோம். ஆனல் அங்குசிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைச் சம்பவங்கள் எங்களை மிகவும் பாதித்துள்ளது என்றார்பியோன்.

மோடி அரசுக்கு சிறுபான்மையினர் கமிஷன் அறிவுரை:

இதற்கிடையே குஜராத் மாநிலத்தின் நலன் கருதி தங்களுடைய பரிந்துரைகளை ஏற்று நடந்து கொள்ள வேண்டும்என்று தேசிய சிறுபான்மையினர் கமிஷன் அம்மாநில முதல்வர் மோடிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.

குஜராத்தில் நடக்கும் இன வன்முறைகள் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரிக்க வேண்டும்என்றும், அங்கு ஒழுங்காகப் பணியாற்றிய போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும்என்றும் சிறுபான்மை கமிஷன் ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.

வன்முறை குறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவர் ஏற்கனவேநியமிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தத் தேவையில்லை என்று குஜராத்அரசு மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் போலீஸ் அதிகாரிகளின் இடமாற்ற உத்தரவை ரத்து செய்யவும் அம்மாநில அரசு மறுத்துவிட்டது.

நிவாரண நடவடிக்கைகளையும் மாநில அரசு விரைவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ள சிறுபான்மையினர்கமிஷன், நிவாரண உதவிகளையும் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+