சைதை, வாணியம்பாடி அதிகாரிகள் டிரான்ஸ்பர் ரத்து: தேர்தல் கமிஷன் உத்தரவு
டெல்லி:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி சட்டசபைத் தொகுதிகளில் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் இடைத்தேர்தல் முடியும் வரை பழைய பதவிகளிலேயே நீடிக்க வேண்டும் என்று தலைமை தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.
சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட 11 மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் வாணியம்பாடி தொகுதியிலுள்ள 4அதிகாரிகள் சமீபத்தில் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதுகுறித்து தேர்தல் கமிஷனில் திமுக புகார் கொடுத்தது.அதன்பேரில் தமிழகத் தலைமை தேர்தல் கமிஷனர் சாரங்கி விசாரித்து தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கைஅனுப்பினார்.
அந்த அறிக்கையின் பேரில், அதிகாரிகள் இடமாற்றத்தை நிறுத்தி வைத்து தலைமை தேர்தல் கமிஷன் உத்தரவுபிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கமிஷனர் (பொறுப்பு) கார்த்திக் மற்றும் வேலூர் மாவட்ட கலெக்டர்மோகன்தாஸ் ஆகியோருக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்குமாறு சாரங்கிக்கு தலைமை தேர்தல் கமிஷன்உத்தரவிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications