மாலத்தீவு சென்றார் பாலசிங்கம்
கொழும்பு:
கடந்த ஒரு மாதமாக இலங்கையில் இருந்த விடுதலைப்புலிகளின் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் நேற்று(புதன்கிழமை) கடல் விமானம் ஒன்றின் மூலம் மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றார்.
இலங்கையில் இருந்தபோது நார்வே தூதுக் குழுவினரையும் பாலசிங்கம் சந்தித்துப் பேசினார்.
கடந்த 10ம் தேதி சர்வதேசப் பத்திரிக்கை நிருபர்களை பிரபாகரன் சந்தித்தபோது, அவர் முழுக்க முழுக்கதமிழிலேயே பேசியதால் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதற்கு வசதியாக அவருடைய வலது பக்கமாகஅமர்ந்திருந்தார் பாலசிங்கம்.
நிருபர்களின் பல கேள்விகளுக்கும் பாலசிங்கமே நேரடியாகப் பதிலளித்துப் பேசினார்.
இந்நிலையில் பாலசிங்கத்தின் விசா காலமும் அவருடன் வந்துள்ள அவருடைய மனைவி ஆட்லே ஆனின் விசாகாலமும் நாளையுடன் முடிவடைவதால், அவர்கள் இலங்கையை விட்டு வெளியேற முடிவு செய்து நேற்றுகிளம்பினர்.
புலிகளின் ஆக்கிரமிப்பில் உள்ள வன்னிப் பகுதியிலிருந்து நேற்று ஒரு கடல் விமானம் மூலம் அவர்கள் இருவரும்மாலத்தீவுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
ஆனால் அங்கிருந்து பாலசிங்கம் தம்பதியினர் என்றைக்கு லண்டன் செல்வார்கள் என்பது குறித்தோ, ஜூன் மாதம்தாய்லாந்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தைக்காக அவர்கள் எப்போது வருவார்கள் என்பது குறித்தோதகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications