திமுக ஆட்சியில் முரசொலி மாறனின் பினாமிக்கு ஒதுக்கப்பட்ட 77 ஏக்கர் நிலம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முரசொலி மாறனின் பினாமியான சீனிவாசன் என்பவருக்கு திமுக ஆட்சியில் அரசுக்குச் சொந்தமான நிலம்முறைகேடாக குத்தகைக்குத் தரப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

இதையடுத்து திமுக எம்.எல்.ஏக்களுக்கும் ஆளும் கட்டி உறுப்பினர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்களை அவைக் காவலர்களை விட்டு வெளியேற்றினார் சபாநாயகர்காளிமுத்து.

காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு ஜெயலலிதா பதிலளித்துப் பேசுகையில்,

சிமெண்ட் ஆலை அதிபர்:

மத்திய அமைச்சரும் திமுக தலைவர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி மாறனுக்கு என். சீனிவாசன் என்றபினாமி உள்ளார். சிமெண்ட் ஆலை அதிபர் என்ற போர்வையில் முரசொலி மாறனுக்குச் சொந்தமானநிறுவனங்களை பினாமியாக இருந்து நடத்தி வருகிறார்.

இவருக்கு கடந்த திமுக ஆட்சியில் அண்ணா சாலையில் நந்தனம் அருகே உள்ள ஒய்.எம்.சி.ஏ.வின் 77 ஏக்கர் நிலம்குத்தகைக்குத் தரப்பட்டது. காஸ்மோபாலிட்டன் கிளப், கோல்ப் பெடரேசன், அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய ஒருகுழுமம் ஏற்படுத்தப்பட்டு அந்த குழுமத்தின் பெயருக்கு நிலம் தரப்பட்டது.

மாறனின் பினாமி என்பதால் தான் இந்த அரசு நிலம் முறைகேடாக இந்தக் குழுமத்துக்குத் தரப்பட்டது. இந்தமுறைகேட்டைச் செய்த கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயலலிதா.

இதைக் கண்டித்து திமுக உறுப்பினர்கள் குரல் கொடுத்தனர். இது ஆதாரமில்லாத குற்றச்சாட்டு என்று அவர்கள்கூறினர்.

அப்போது தொடர்ந்து பேசிய ஜெயலலிதா,

2001ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நிலம் ஒதுக்கப்பட்டது. பின்னர் சட்டப் பேரவைத் தேர்தல் நடப்பதற்கு சிலமாதங்களுக்கு முன் இந்த நிலத்தின் குத்தகை காலத்தை 30 ஆண்டுகளுக்கு கருணாநிதி நீட்டித்தார். குத்தகைக்கானவிலையைக் கூட அந்த உத்தரவில் அரசு குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெ. சவால்:

இவ்வளவு தூரம் அந்த நபருக்காக அரசு இறங்கி வந்திருப்பதில் இருந்தே அவர் முரசொலி மாறனின் பினாமிஎன்பது உறுதியாகிவிட்டது. இன்னும் இதற்கு என்ன ஆதாரம் வேண்டும் என்றார்.

மேலும் கோல்ப் மைதானத்தை குத்தகை எடுத்துள்ளவருக்கும், முரசொலி மாறனுக்கும் தொடர்பு இல்லை என்று துரைமுருகனால்நிரூபிக்க முடியுமா என்று சவால் விட்டார்.

இதையடுத்து முதல்வர் தவறான குற்றச்சாட்டைக் கூறுவதாகவும் இதை அவைக் குறிப்பில் இருந்து நீக்க வேண்டும்என திமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இக் கோரிக்கையை ஏற்க சபாநாயகர் காளிமுத்துமறுத்தார்.

இதையடுத்து அதிமுகவுக்கு எதிராக திமுக உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பினர். பதிலுக்கு அதிமுகவினரும்கருணாநிதிக்கு எதிராக குரல் கொடுத்தனர்.

இதனால் அவையில் காது கிழியும் அளவுக்கு பெரும் சத்தம் எழுந்தது.

திமுக வெளிநடப்பு:

கடைசியில் முதல்வரின் பேச்சைக் கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக் கூறிவிட்டு திமுக சட்டப் பேரவைத் துணைத்தலைவர் துரைமுருகன் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தார். அவருடன் ஸ்டாலினும் அவையை விட்டுவெளியேறினார்.

ஆனால், பிற திமுகவினர் தொடர்ந்து அவைக்குள் இருந்தவாரே அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். உங்கள்தலைவர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்களே. நீங்கள் ஏன் இங்கே நின்று கூச்சல் போட்டு அவையை நடத்தவிடாமல் தடுக்கிறீர்கள் என்றார் காளிமுத்து.

ஆனாலும் தொடர்ந்து திமுக எம்.எல்.ஏக்கள் அரசைக் கண்டித்து கோஷம் எழுப்பியபடி இருந்தனர். இதையடுத்துஅவர்களை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு சபாநயாகர் காளிமுத்து உத்தரவிட்டார்.

சசியின் பினாமி ஜெ...

காவலர்கள் வந்து திமுகவினரை இழுத்து வெளியே தள்ளினர். அப்போது திமுக உறுப்பினர்கள் சசிகலாவின் பினாமிஜெயலலிதா என்று கோஷமிட்டனர்.

அவைக்கு வெளியே நிருபர்களிடம் பேசிய துரைமுருகன், முதல்வர் ஜெயலலிதா ஆதாரமில்லாதகுற்றச்சாட்டுகளைக் கூறுகிறார். அதைக் கண்டிக்க வேண்டிய சபாநாயகரும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார். இந்த அவையில் இருந்து என்ன நீதியை எதிர்பார்க்க முடியும் என்றார்.

அவையை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தபோதே அவைக் காவலர்களைவிட்டு காளிமுத்து தங்களைவலுக்கட்டாயமாக வெளியேற்றியதாக திமுக எம்.எல்.ஏக்கள் குற்றம் சாட்டினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+