தாலி கட்டி, கும்மியடித்து விடியவிடிய அலிகள் கொண்டாட்டம்

Subscribe to Oneindia Tamil

உளுந்தூர்பேட்டை:

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில் அலிகள் தாலி கட்டி கும்மி அடித்து விடியவிடிய கொண்டாடினர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டையில், கூவாகம் கூத்தாண்டவர் கோவிலில், வருடந்தோறும்சித்திரை மாதம் வழக்கமாக நடக்கும் அலிகள் திருவிழாவில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் அலிகள் வந்துகலந்து கொள்கின்றனர்.

இந்த ஆண்டுக்கான திருவிழா 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு முக்கியதிருவிழாவான அலிகள் திருமண விழா நடைபெற்றது. ஏராளமான அலிகள் இதில் கலந்து கொண்டனர்.

மாலை 6 மணியிலிருந்து பூசாரி கேசவன் தலைமையிலான 10 பூசாரிகள் அங்கு வந்திருந்த அலிகள்அனைவருக்கும் தாலி கட்டினர். அதன்பின் அலிகள் கும்மியடித்தும் நடனமாடியும் கோலாகலமாக விழாவைக்கொண்டாடினர்.

பின்னர் தாலிகளை அறுத்தெறிந்து ஒப்பாரி வைத்த நிகழ்ச்சிதான் திருவிழாவின் "ஹைலைட்"டாக அமைந்திருந்தது.நேற்று அதிகாலை வரை இந்தத் திருவிழா நீடித்தது.

மும்பை, டெல்லி, கேரளா, கர்நாடகா போன்ற பல இடங்களிலிருந்தும் அலிகள் வந்திருந்தனர். அவர்கள்புத்தாடைகள், நகை நட்டுக்கள் அணிந்து, தலை நிறைய பூ வைத்து விழாவை சிறப்பாக கொண்டாடினர்.

விழாவின் பிண்ணனி:

பாரதப் போரில் பஞ்ச பாண்டவர்கள் தங்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக சாமுத்திரிகா லட்சணம்பொருந்திய ஒரு வாலிபரை பலி கொடுக்க முடிவெடுக்கின்றனர். அந்த வாலிபரை தேடுகையில், அரவாணன்தான்அதற்கு பொருந்தியவனாக அமைகிறான்.

அர்ச்சுனன் - நாக கண்ணி தம்பதியருக்கு பிறந்த மகன்தான் அரவாணன். அவனைப் பலியிட தீர்மானிக்கின்றனர்.அவனும் அதற்கு ஒத்துழைக்கிறான். ஆனால் அதற்கு முன் அவன் திருமணம் செய்து கொள்ள விருப்பப்படுவதாகதெரிவிக்கிறான்.

ஆனால், அவனுக்கு பெண் கொடுக்க எவரும் முன் வரவில்லை. எனவே, கிருஷ்ண பெருமானே பெண் வேடம்பூண்டு வந்து அரவாணனைத் திருமணம் செய்து கொள்கிறார். மறுநாள், அரவாணனை பலியிடுகிறார்கள். பெண்வேடம் பூண்டு வந்த கிருஷ்ண பரமாத்மா விதவைக் கோலம் பூண்டு விடுகிறார்.

அரவாணனை கூத்தாண்டவர் என்று கோயில் கட்டி கும்பிடுகிறார்கள். பெண் வேடம் பூண்ட கிருஷ்ண பெருமானின்பிறப்பை அலி பிறப்பு என்று கூறுகிறார்கள். இதனால் அலிகள் தங்களை புனித பிறப்பாகவே கருதுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+