சட்டசபையைக் கலக்கிய எம்.ஜி.ஆர். பாடல் !!
சென்னை:
தமிழக சட்டசபையில் எம்.ஜி.ஆர். படப் பாடலைப் பாடி பதில் அளித்தார் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.சி.ராமசாமி.
சட்டசபையில் நேற்று (புதன்கிழமை) கோவில் ஆக்கிரமிப்பு குறித்த விவாதம் நடந்தது.
அப்போது திமுக உறுப்பினரும் நடிகருமான நெப்போலியன் மற்றும் அதிமுக உறுப்பினர் சேகர் பாபு ஆகியோர்கேட்ட கேள்விகளுக்கு வித்தியாசமான முறையில் பதிலளித்தார் ராமசாமி. அவர் கூறுகையில்,
கோவில் நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சும்மா விடமாட்டோம்.
"ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால், அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்" என்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அன்றே பாடியுள்ளார்.
அவரது வாரிசான புரட்சித் தலைவி அவர்களுடைய ஆட்சியில் தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும்அவர்களை விட மாட்டோம். தக்க தண்டனை வழங்குவோம் என்றார்.
எம்.ஜி.ஆர். பாடலை ராமசாமி பாடியபோது அவையில் அதிமுக உறுப்பினர்கள் மேஜைகளைப் பலமாகத் தட்டிவரவேற்றனர்.












Click it and Unblock the Notifications