இந்திய விமானப் படை விமானத்தைக் காணவில்லை

Subscribe to Oneindia Tamil

தேஜ்பூர்:

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான மிக்-29 ரக விமானம் அதை ஓட்டிச் சென்ற 2 விமானிகளுடன் காணாமல்போய்விட்டது. கடந்த 5 நாட்களாக இந்த விமானத்தைக் காணவில்லை.

கடந்த 20ம் தேதி காலை அஸ்ஸாம் மாநிலம் சோந்திபூரில் உள்ள விமானப் படைத் தளத்தில் இருந்து இந்தவிமானம் வழக்கமான பயிற்சிக்காகப் புறப்பட்டது.

விமானத்தை ஸ்கூவாட்ரன் லீடர் கான் மற்றும் பிளையிங் ஆபிசர் தகியா ஆகியோர் ஓட்டிச் சென்றனர்.

தர்ராங் மாவட்டத்தின் மீது பறந்து கொண்டிருந்தபோது இந்த விமானத்துடனான தொடர்பை பயிற்சி மையத்தின்கட்டுப்பாட்டு டவர் இழந்தது.

இந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என அஞ்சப்பட்டதால் உடனடியாக இந்த விமானத்தைத்தேடி விமானப் படையின் பிற விமானங்களும் ஹெலிகாப்டர்களும் விரைந்தன.

ஆனால், விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தினமும் நூற்றுக்கணக்கான முறை ஹெலிகாப்டர்கள் தர்ராங்மாவட்டத்தில் ஆகாயத்தில் இருந்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றன.

தரையிலும் ராணுவம், போலீஸ், ரயில்வே போலீசார், விமானப் படை வீரர்கள் இந்தத் தேடுதல் வேட்டையில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்திய-பூடான் எல்லையில் இந்த விமானம் விழுந்திருக்கலாம் எனக் கருதப்படுவதால் பூடான் அரசின்உதவியையும் இந்தியா நாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+