பிரேசில் செல்கிறார் ஸ்டாலின்.. கராத்தே ஆட்சேபம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் பிரேசில் நாட்டில் நடக்கும் உள்ளாட்சித் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அந் நாட்டுக்குச்செசல்கிறார். ஆனால் ஸ்டாலின் மீது மேம்பால ஊழல் வழக்கு விசாரணையில உள்ளபோது ஸ்டாலின் எப்படி பிரேசில் போகலாம் என்றுதுணை மேயர் கராத்தே தியாகராஜன் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், பிரேசில் நாட்டில் மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில்உள்ளாட்சித் தலைவர்கள் மாநாடு நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக நான் 5ம் தேதி பிரேசில் செல்கிறேன். மத்திய அரசின் தேர்வின்பேரில் நான் இதில் கலந்து காள்கிறேன்.

நான் பிரேசில் செல்வதற்கு சென்னை மாநகராட்சி மன்றத்தின் அனுமதி தேவையில்லை. நான் போகிறேன் என்ற ஒரு தகவலைதெரிவித்தாலே போதும்.

சென்னை மாநகராட்சிக்கு நடந்த இடைத் தேர்தலில் 2 பேர் அதிமுக சார்பாக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளார்கள். அந்த இடைத் தேர்தல்முறைகேடாகவும், ஜனநாயக நெறிமுறைகளைக் கீழே போட்டு மிதித்தும் நடந்த தேர்தல்.

அதில் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு நான் பதவிப்பிரமாணம் செய்து வைத்தால் அது ஜனநாயக நெறிமுறையற்றதேர்தலை நானே அங்கீகரித்தது போலாகி விடும்.

அதனால் தான் புதன்கிழமை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றார் அவர்.

கராத்தே ஆட்சேபம்:

இதற்கிடையே, ஸ்டாலின் வெளிநாட்டுக்குப் போவதை துணை மேயரும், ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட்டு வருபவருமான கராத்தேதியாகராஜன் கடுமையாக ஆட்சேபித்துள்ளார்.

ஸ்டாலின் மீது மேம்பால ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளபோது அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது என்று கூறியுள்ளார் கராத்தே.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மேம்பால ஊழல் வழக்கில் ஸ்டாலின் ஜாமீனில் விடுதலையாகி உள்ளார். இந்தநிலையில் அவர் வெளிநாடு செல்ல விரும்பினால் சி.பி.சி.ஐ.டி போலீஸ் அல்லது கோர்ட்டில் அனுமதி வாங்க வேண்டும். அதை அவர்வாங்கினாரா என்பது தெரியவில்லை.

சென்னை நகரில் மக்கள் பாதிக்கப்படும் வகையில் எந்த நிகழ்ச்சி நடந்தாலும் அங்கு சென்று நலம் விசாரிக்க வேண்டியது மேயரின் கடமை.ஆனால் சென்னையின் பல இடங்களில் குடிசைகள் தீப்பிடித்து எரிந்த சம்பவங்களின்போது அங்கு ஸ்டாலின் செல்லவில்லை.

மக்களை முறையாகச் சந்தித்து அவர் குறைகள் கேட்பதில்லை. இந்த நிலையில் பிரேசிலுக்குப் போய் என்ன பேசப் போகிறார் என்றுதெரியவில்லை என்றார் கராத்தே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+