இடைத் தேர்தல்: 3 தொகுதிகளிலும் போட்டியிட அதிமுக முடிவு
சென்னை:
வரும் மே 31ம் தேதி சட்டசபை இடைத் தேர்தல் நடக்கவுள்ள சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும்அச்சிறுப்பாக்கம் ஆகிய 3 தொகுதிகளிலுமே அதிமுக போட்டியிடும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும்தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று கூறினார்.
இதுகுறித்து அவர் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்பட்டதை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது.
தேர்தல் கமிஷனின் உத்தரவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால் அதிகாரிகள் இடமாற்றம்செய்யப்பட்டதற்கும் அரசுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.
சென்னை மாநகராட்சி கமிஷனரும் வேலூர் மாவட்ட கலெக்டரும்தான் இந்த இடமாற்ற உத்தரவுகளைப்பிறப்பித்தனர். மேலும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் எந்தத் தேர்தல் வேலைகளிலும்ஈடுட்டிருக்கவில்லை.
இடைத் தேர்தல் நடைபெறவிருக்கும் மூன்று தொகுதிகளிலும் அதிமுக தன்னுடைய வேட்பாளர்களை நிறுத்தும்.வேட்பாளர்களின் பெயர்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications