இடைத் தேர்தலில் திமுக, அதிமுகவுக்கு "நோ" ஆதரவு: இந்திய கம்யூ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வரும் சட்டசபை இடைத் தேர்தலின்போது திமுக கூட்டணிக்கோ அல்லது அதிமுக கூட்டணிக்கோ ஆதரவளிக்கப்போவதில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று அறிவித்தது.

அச்சிறுப்பாக்கம் சட்டசபைத் தேர்தலில் தங்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனரான டாக்டர்ராமதாஸ் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்து ராமதாசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளரான நல்லக்கண்ணு கூறியுள்ளதாவது:

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவை ஆதரிக்க எங்களால் முடியாது. எனவே அதே தேசிய ஜனநாயகக்கூட்டணியில் உள்ள பாமகவுக்கும் நாங்கள் ஆதரவளிக்க இயலாது.

தற்போது தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அதிமுக அரசு மக்களுக்கு எதிரான அரசாகத்தான் விளங்குகிறது.

மேலும் சமீப காலத்தில் பாஜகவுடன் அதிமுக வேகமாக நெருங்கிக் கொண்டிருப்பதையும் பார்க்க முடிகிறது. பலவிஷயங்களில் பாஜகவை ஆதரித்தே அதிமுக செயல்பட்டு வருகிறது.

எனவே அதிமுகவையும் இந்த இடைத் தேர்தலின்போது நாங்கள் ஆதரிக்க மாட்டோம் என்று அக்கடிதத்தில்நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+