வேலூர் அருகே கோவில் தேர் தீப்பிடித்து எரிந்தது

Subscribe to Oneindia Tamil

வேலூர்:

வேலூர் அருகே கோவில் தேர் ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்த விபத்தில் 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ளபொருட்கள் சேதமடைந்தன.

வேலூர் அருகே கீழ்மொணவூரில் உள்ள பொன்னியம்மன் என்ற கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்கோவில் திருவிழா நடைபெறும்.

அந்த திருவிழாவின்போது தேரோட்டம் நடக்கும். தேரோட்டம் முடிந்ததும் தேரை கருகம்பத்தூரில் நிறுத்தி,அதன்மீது ஓலைகளைப் போட்டு மூடி விடுவர்.

இவ்வாறு, அந்த ஊரை வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே வலம் வரும் தேர், 130 அடி உயரமுடையது. நேற்றுஅதிகாலை அந்தத் தேர் திடீரென தீப்பிடித்து எரிந்தது.

அதைப் பார்த்த பொதுமக்கள், தீயை அணைக்க முற்பட்டனர். தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் பறந்தது.வேலூரில் உள்ள தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.

இந்தத் தீவிபத்தில் தேரைச் சுற்றியிருந்த ஓலைக் கூரை முற்றிலுமாக எரிந்துவிட்டது. தேரின் சில பகுதிகளும் எரிந்துவிட்டன. அருகில் இருந்த வீடுகளின் மேற்கூரைகளும் எரிந்து சாம்பலாகின. இவ்விபத்தினால் 1 லட்ச ரூபாய்மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்தன.

தேரின் அருகே மின்சார வயர் செல்வதால், மின்சாரக் கசிவு ஏற்பட்டு தேர் தீப்பிடித்து இருக்கலாம் என்றுகூறப்படுகிறது.

இதைப் பற்றி விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+