ஹா... 50 கோடி ரூபாய் ஹெராயின்: முக்கியப் புள்ளி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் ரூ.50 கோடி மதிப்புள்ள ஹெராயினைப் போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் இன்றுகைப்பற்றினர். இது தொடர்பாக முக்கியப் புள்ளி ஒருவரையும் அவர்கள் கைது செய்தனர்.

மத்தியப் பிரதேசத்திலிருந்து வந்த ஒரு லாரியில் போதைப் பொருள் கடத்தப்படுவதாக அதிகாரிகளுக்கபு ரகசியதகவல் கிடைத்தது. லாரியில் வரும் இந்த போதைப் பொருள் ஆவடி அருகே ஒரு காருக்கு மாற்றப்பட்டு அதன்மூலம் கடத்தப்படும் என்றும் தகவல் வந்தது.

இதையடுத்து ஆவடி அருகே குறிப்பிட்ட இடத்தில் போதைப் பொருள் அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அப்போது அந்த குறிப்பிட்ட லாரி அங்கு வந்தது. உடனே அதை அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

அதிகாரிகளைப் பார்த்தவுன் லாரி டிரைவர் இறங்கி ஓடத் தொடங்கினான். அதில் இருந்த வேறு சிலரும்லாரியிலிருந்து தப்பியோடினர்.

இதையடுத்து லாரியை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் 43.5 கிலோஎடையுள்ள ஹெராயின் இருந்தது. அதை உடனடியாக அதிகாரிகள் கைப்பற்றினர்.

அதைக் கைப்பற்றிவிட்டு அதிகாரிகள் மறைந்து நின்று கொண்டனர். அப்போது லாரியின் அருகே ஒரு கார் வந்தது.இதையடுத்து அந்த காரையும் அதிகாரிகள் சுற்றி வளைத்தனர்.

அதில் ரசீக் என்பவர் இருந்தார். அவரைப் பிடித்து விசாரித்தபோது அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்றுதெரியவந்தது.

அவர் கொடுத்த தகவலின்பேரில் கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஒரு வீட்டை அதிரடியாக முற்றுகையிட்டனர்.

வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறக்க மறுக்கவே, கதவை உடைத்துக் கொண்டு புகுந்த அதிகாரிகள் அங்கு தீவிரசோதனை நடத்தினர். அப்போது அங்கு சுமார் 7 கிலோ ஹெராயின் பாக்கெட்டுகள் இருந்தன.

கைப்பற்றப்பட்ட மொத்த ஹெராயினின் மதிப்பு சர்வதேசச் சந்தையில் ரூ.50 கோடியாகும்.

சென்னை வழியாகப் இலங்கை, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுவருகின்றன.

சென்னையில் சமீப காலத்தில் இவ்வளவு அதிக மதிப்புள்ள ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை என்று தெரிவித்த போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள், இது தொடர்பாக முக்கியப் புள்ளி ஒருவரையும்கைது செய்துள்ளதாகக் கூறினர்.

ஆனால் கைது செய்யப்பட்ட அந்த நபர் யார் என்பதைத் தெரிவிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதுதொடர்பாக மேலும் சிலரிடம் தீவிர விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+