அணி அணியாய் அதிமுகவுக்கு வரும் பாமகவினர்: ஜெ. பெருமிதம்
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் கூடாரம் காலியாகிக் கொண்டு வருகிறது. அக்கட்சியினர் அணி அணியாக விலகிஅதிமுகவில் சேர்ந்து வருகிறார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
சட்டசபையில் வியாழக்கிழமை காவல்துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடந்தது. அப்போது பாட்டாளிமக்கள் கட்சித் தலைவர் ஜி.கே. மணி பேசுகையில், போலீஸ் அதிகாரிகள் தங்களது எல்லையை மீறி நடக்கின்றனர்.உளவுத்துறை அதிகாரிகள் சிலர் பிற கட்சிகளிலிருந்து ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர். இதுபோலீசாரின் பணியல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
அப்போது குறுக்கிட்டு ஜெயலலிதா பேசியதாவது:
அதிமுக ஆளுங்கட்சியாக உள்ளது. முன்னணிக் கட்சியாக உள்ள அதிமுகவில் சேர விரும்பி பல்வேறு கட்சிகளைச்சேர்ந்தவர்கள் தாங்களாகவே விரும்பி வந்து சேருகின்றனர்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் அதுபோலவே சாரை சாரையாக வந்து சேருகின்றனர். அந்தக்கட்சியின் கூடாரம் காலியாகி வருகிறது. உறுப்பினர் மணியின் கட்சித் தலைவர் முடிந்தால் அவர்களைத் தடுத்துநறுத்தட்டும்.
அதை விட்டு விட்டு உளவுத்துறைதான் இதற்குக் காரணம் என்று கூறுவதை எப்படி ஏற்க முடியும் என்றார்ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications