சட்டசபைக்கு வந்தார் கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தற்போது நடந்து வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 2வது முறையாக இன்று சட்டசபைக்கு வந்த திமுகதலைவர் கருணாநிதி, அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு உடனடியாகத்திரும்பி விட்டார்.

கடந்த மார்ச் 9ம் தேதி ஆளுநர் உரையுடன் தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பமானது.

அந்த ஆளுநர் உரையின்போது மட்டும் சட்டசபையில் கலந்து கொண்ட கருணாநிதி, அதன் பிறகு எந்த சட்டசபைக்கூட்டத்திலும் கலந்து கொள்ளவே இல்லை.

இந்நிலையில் இன்று கருணாநிதி மீண்டும் சட்டசபைக்கு வந்தார். சட்டசபை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளவருகைப் பதிவேட்டில் அவர் கையெழுத்திட்டார்.

பின்னர் சட்டசபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளாமலேயே உடனடியாகத் திரும்பிச் சென்று விட்டார் கருணாநிதி.

இது குறித்து கூட்டம் முடிந்த பின்னர் முதல்வர் ஜெயலலிதாவிடம் நிருபர்கள் கேட்டபோது, சட்டசபை கூட்டத்தில்கருணாநிதி கலந்து கொள்வதை யாரும் தடுக்கப் போவதில்லை என்றும் அவர் தாராளமாக சட்டசபைக்குள் வரலாம்என்றும் ஜெயலலிதா பதிலளித்தார்.

கருணாநிதி தாராளமாக சட்டசபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளலாம் என்றும் அவருக்குத் தகுந்த பாதுகாப்புஅளிக்கப்படும் என்றும் ஏற்கனவே சபாநாயகர் காளிமுத்து கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+