இலங்கை அகதிகள் விவகாரம்: ஐ.நா- புலிகள் பேச்சு

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இனக் கலவரத்தால் இலங்கையை விட்டு தப்பிச் சென்று அகதிகளாக வாழ்ந்து வருபவர்களை மீண்டும் அந் நாட்டில்குடியேற வைக்கும் முயற்சிகளில் ஐ.நா. ஈடுபட்டுள்ளது.

இலங்கையைவிட்டு சுமார் 8 லட்சம் தமிழர்கள் வெளியேறி அகதிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம்புகுந்துள்ளனர். இவர்களை மீண்டும் நாடு திரும்ப வைப்பது குறித்த ஆரம்பகட்டப் பணிகளை ஐ.நா.தொடங்கியுள்ளது.

இந் நிலையில், நாட்டை விட்டு வெளியேறியவர்களை எங்கள் இயக்கம் மூலமாகத் தான் மீண்டும் குடியேற்றவைக்க வேண்டும் என விடுதலைப் புலிகள் இயக்கம் ஐ.நாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அகதிகளின் மறுவாழ்வுக்காக திட்டத்தை எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும். நாங்கள் அவர்களின்மறுவாழ்வை உறுதி செய்வோம் என புலிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவாதிக்க வட இலங்கைக்கு வந்த ஐ.நாவின் அகதிகள் மறுவாழ்வுக்கான சிறப்பு ஒருங்கிணைப்பாளர்கோபி அஸோமணியிடம் புலிகளின் அரசியல் பிரிவின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர்.

அஸோமணி கூறுகையில், நான் புலிகளுடன் பேசினேன். அகதிகளுக்கு மறுவாழ்வு கிடைக்க வேண்டும் என மிகஆர்வமாக உள்ளனர். அதே நேரத்தில் அந்த மறுவாழ்வுக்கான உதவித் திட்டம் தங்கள் மூலமாக அமலாக்கப்படவேண்டும் என்று விரும்புகின்றனர்.

அமைதி முயற்சிகளின் முதல் கட்டமாக இந்த மக்களை நாடு திரும்பச் செய்ய வேண்டும். இதன்மூலம் தான்அமைதி முயற்சி வெற்றி பெறும் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+