நீதிமன்ற தீர்ப்பை விமர்சித்தவருக்கு 6 மாதம் ஜெயில்
சென்னை:
நாவரசு கொலை வழக்கில் ஜான் டேவிட்டுக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின்தீர்ப்பை விமர்சித்து கடிதம் எழுதியவருக்கு, 6 மாதம் ஜெயில் தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அண்ணாமலை பல்கலைக்கழக மாணவரான நாவரசு கொலை செய்யப்பட்ட வழக்கில், ஜான் டேவிட் என்ற சகமாணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கடலூர் தனி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து ஜான் டேவிட் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.இந்த மனுவை டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது.
கொலை செய்தது ஜான் டேவிட் தான் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லாததால் உயர் நீதிமன்றம் ஜான்டேவிட்டை விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை விமர்சித்து பாதிக்கப்பட்டோர் கழகத் தலைவரான செந்தமிழ்கிழார் என்பவர் மறுநாள் உயர் நீதிமன்றநீதிபதிகளுக்கு கடிதம் எழுதினார். கொலை வழக்கில் டேவிட்டை விடுதலை செய்தது தவறு என்றும் விடுதலைசெய்ததற்கான காரணத்தை கேட்டும் அவர் எழுதியிருந்தார்.
"டேவிட் கொலையாளி இல்லை என்றால் அந்த கொலையை செய்தவர் யார்? சாதாரணத் திருட்டு வழக்கு போலடேவிட் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 15 நாட்களுக்குள் தீர்ப்பை நியாயப்படுத்தி விளக்கம் தராவிட்டால் பொதுமக்களுக்கு தெரிவிப்பேன்" என்றும் செந்தமிழ்கிழார் அக்கடிதத்தில் கூறியுள்ளார்.
இந்தக் கடிதத்தை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசின்அட்வகேட் ஜெனரல் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு தொடர்பான தீர்ப்பை நீதிபதிகள் வழங்கினர். தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
உயர் நீதிமன்றத் தீர்ப்பை விசாரிக்கவும், விமர்சிக்கவும் உச்ச நீதிமன்றத்திற்கு மட்டுமே உரிமை உண்டு. பத்திரிக்கைவாயிலாக கோர்ட் செயல்பாடுகளை விமர்சிப்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
எனவே இந்தக் கடிதத்தை நீதிமன்ற அவமதிப்பாக கருதி, செந்தமிழ்கிழாருக்கு 6 மாதம் ஜெயில் தண்டனையும்,ரூ.2,000 அபராதமும் விதிக்கப்படுகிறது. அபராதத்தை கட்ட தவறினால், 2 மாதம் கூடுதலாக சிறை தண்டனையைைஅனுபவிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
செந்தமிழ்கிழார் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 2 வாரங்களுக்கு இந்தத் தண்டனை நிறுத்திவைக்கப்படுகிறது. இந்த காலக் கட்டத்தில், சூளைமேடு போலீஸ் நிலையத்தில் காலை 10 மணி முதல் 12 மணிக்குள்செந்தமிழ்கிழார் கையெழுத்து போட வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications