பிரபாகரனை பிடிக்கும் தீர்மான எரிப்பு போராட்டம்: நெடுமாறன் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இலங்கையிலிருந்து பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை எரிக்கும் போராட்டம் வரும் மே 8ம்தேதி நடைபெறும் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவரான பழ. நெடுமாறன் கூறினார்.

சென்னையில் நடந்த பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளின் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சுமார் 18 வருடங்களாகப் போர் நடக்கும் இலங்கையில் அமைதி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. அதைதமிழகத்தில் உள்ள ஆறு கோடி தமிழர்களும் ஆதரித்துக் குரல் கொடுக்க வேண்டும் என்றும் இந்தக் கூட்டத்தில்முடிவெடுக்கப்பட்டது.

தமிழக சட்டசபையில் பிரபாகரனுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானம் தமிழக மக்களின்உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தீர்மானமே அல்ல என்று கூறிய இக்கூட்டத்திற்குத் தலைமை வகித்த நெடுமாறன்,அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் இந்தத் தீர்மான நகலை எரிக்கும் போராட்டம் நடைபெறும் என்றும்தெரிவித்தார்.

பாவாணருக்கு நெடுமாறன் புகழாரம்:

முன்னதாக திருச்சியில் தமிழியக்கத்தின் சார்பில் நடைபெற்ற பாவாணர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பேசியநெடுமாறன், அவர் தமிழ் தேசியத்திற்காக பாடுபட்டவர் என்று கூறினார்.

விழாவின்போது நெடுமாறன் பேசியதாவது:-

எந்த ஒரு இனமும் அந்த இன எழுச்சிக்காக பாடுபடுவோரை நினைவு கூர்ந்தால்தான் அந்த இனம் வாழும்.திராவிடத்தின் தாய் மொழி தமிழ். அனைத்துக்கு மூலமும் தமிழ் மொழியே.

ஆதிமனிதன் தோன்றியது இந்த தமிழ் மண்ணான குமரிக் கண்டத்தில்தான். இந்தக் கொள்கையைநிலைநாட்டுவதையே குறிக்கோளாகக் கொண்டு ஆராய்ச்சி செய்தவர் பாவாணர்.

அவரது ஆராய்ச்சிக்காக அவர் எழுதியதெல்லாம் தமிழ் தேசியத்தை மீட்டு உருவாக்க பயன்பட்டன. தமிழ்தேசியத்திற்காக தனிமனிதனாக இந்த அளவுக்கு எழுதியவர் இவர் ஒருவர் மட்டுமே.

20ஆம் நூற்றாண்டில் அவர் மேற்கொண்ட பெரும் முயற்சிகளால் தான் தமிழ் தேசியம் இந்த அளவு நிமிர்ந்துநிற்கிறது. சென்ற நூற்றாண்டில் எண்ணற்ற அறிஞர்கள் தமிழ் தேசிய உணர்வை ஊட்ட அரும்பணியாற்றினர்.அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் இந்த நூற்றாண்டில் நிறைவேற்றப்பட வேண்டும்.

தமிழ் தேசியத்தை இம்மண்ணில் விதைக்க, இப்போது இந்த மண் பக்குவமாகவும் பதமாகவும் இருக்கிறது.இப்போது விதைக்கும் வித்துக்கள் எதிர் காலத்தில் நல்ல பலன் அளிக்கும் மரங்களாகும்.

பாவாணருடைய எழுத்துக்களும் ஈழத்தில் விதைக்கப்பட்டு, இன்று சோலையாக நிற்பவை தான். ஆறு கோடி தமிழ்மக்களும் தமிழ் தேசியத்தை வளர்க்க பாவாணரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார்நெடுமாறன்.

இவ்விழாவில் புலவர் பழனிவேலனார், இளங்குமரனார் மற்றும் தமிழறிஞர்கள் பாராட்டப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+