பாகிஸ்தான் மசூதியில் குண்டு வெடிப்பு: 11 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு மசூதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட ஒரு பயங்கரமான குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 9 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் கொல்லப்பட்டனர்.

பக்கார் என்ற நகரில் உள்ள மசூதியில் தொழுகைக்காக பாகிஸ்தான் முழுவதிலுமிருந்து சுமார் 10,000 பேர் வந்துகுவிந்திருந்தனர்.

நேற்று நள்ளிரவு (இந்திய நேரப்படி) சுமார் 11.30 மணிக்கு பயங்கரச் சத்தத்துடன் குண்டு வெடித்தது.

இச்சம்பவத்தில் ஒன்பது பெண்களும் இரண்டு குழந்தைகளும் அந்த இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.சுமார் 50 மீட்டர் சுற்றளவு தூரத்தில் இறந்தவர்களின் உடல்கள் சிதறிக் கிடந்ததாக நேரில் பார்த்தவர்கள்தெரிவித்தனர்.

இந்தக் குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டனர்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் தனியாக தொழுகை செய்யும் இடத்தில்தான் இந்தப் பயங்கரமான குண்டு வெடிப்புச்சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதனால்தான் இச்சம்பவத்திலிருந்து ஆண்கள் அனைவரும் தப்பிவிட்டனர்.

பாகிஸ்தானில் ஷியா மற்றும் சன்னி ஆகிய இரு முஸ்லீம் பிரிவுகளுக்கிடையே அடிக்கடி நடந்து வரும் மோதலின்எதிரொலிதான் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் என்று கூறப்படுகிறது.

ஷியா பிரிவைச் சேர்ந்த மசூதியில்தான் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தீவிரவாதிகளின் செயல்தான் என்று பாகிஸ்தான் போலீசார் தெரிவித்தாலும், இதுவரை இந்தச் சம்பவத்திற்குஎந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+