சட்டசபையில் இருந்து பரிதி சஸ்பெண்ட்
சென்னை:
தமிழக சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ. பரிதி இளம்வழுதி இந்தக் கூட்டத் தொடர் முடியும் வரைசஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இன்றைய சட்டசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதியைப் பற்றி சமூக நலத்துறை அமைச்சரான வளர்மதிதரக்குறைவாகப் பேசினார்.
இதையடுத்து வளர்மதி அந்த வார்த்தையை வாபஸ் பெற வேண்டும் என்று பரிதி கோரிக்கை விடுத்தார். அதை ஏற்கசபாநாயகர் காளிமுத்து மறுக்கவே வளர்மதியைப் பார்த்து பரிதி திட்டினார்.
இதையடுத்து பரிதியை கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதாக சபாநாயகர்காளிமுத்து அறிவித்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் பரிதியும் முன்னாள் திமுக அமைச்சரும் சட்டசபையில் ஆபாசமானவார்த்தைகளைப் பேசினார்கள் என்பதற்காக கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்கள் முழுவதும் அவர்களைகாளிமுத்து சஸ்பெண்ட் செய்தார்.
ஆனால் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவர்கள் இருவரும் ஒருநாள் மட்டுமே சஸ்பெண்ட்செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது பரிதி கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஒரு திமுக எம்.எல்.ஏவாக இருந்து கொண்டு ஆளும் கட்சியின் கண்களில்விரலைவிட்டு ஆட்டியவர் பரிதி. நயமாகப் பேசும்போதே இடையில் சுருக் என்று தைக்கும் வார்த்தைகளைசெருகுவதில் ஜித்தர் இவர்.
இதனால் சட்டசபையில் இவர் பேச ஆரம்பித்தாலே ஆளும் தரப்பில் டென்சன் எகிறுவது வழக்கம்.












Click it and Unblock the Notifications