டான்சி வழக்கை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
டெல்லி:
டான்சி வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
டான்சி வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுதலை செய்து கடந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி தினகர் தீர்ப்பளித்தார்.
உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜனவரி 22ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனுஒன்றை திமுக வழக்கறிஞரான ஆர்.எஸ். பாரதி தாக்கல் செய்தார்.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், வழக்கை விரைந்து விசாரிப்பது குறித்து உச்ச நீதிமன்றத் தலைமைநீதிபதியிடம் கோரிக்கை விடுக்கலாம் என்றும் அனுமதியளித்தது.
இதையடுத்து டான்சி வழக்கு தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல் முறையீட்டு மனு தொடர்பானவிசாரணையை விரைவில் நடத்தக் கோரி பாரதி மற்றொரு மனுவைத் தாக்கல் செய்தார்.
இம்மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், வரும் கோடை விடுமுறைக்குப் பின்னர் டான்சி மேல் முறையீட்டுவழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வரும் மே 10 முதல் ஜூன் 7ம் தேதி வரை உச்ச நீதிமன்றத்திற்குக் கோடை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications